Friday, July 3, 2015

சார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை




120 வருடங்களுக்கு முன்  இங்கிலாந்து தேசத்திலிருந்து அமெரிக்க தேசத்திற்கு மெதுவாக ஒரு கப்பல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போழுது தூரத்தில் தண்ணீரில் ஒரு மிதவைப் பொருள். பக்கத்தில் வேறு ஒரு கப்பலும் இல்லை. அதில் ஆட்களும் யாரும் தென்படவில்லை. 

அதை கிட்டத்தில் பார்க்கும் ஆர்வத்தில், ஒரு சிறு படகில் அதை நோக்கி பயணிக்கிறார்கள்.  அதனை நெருங்கிய போது, அந்த காலத்தில் பிரசித்தி பெற்ற "இயேசு என் ஆத்தும நேசர்" என்ற  பாடல் அந்த பொருள் மிதந்த திசையிலிருந்து கணீரென்று வருகின்றது. அருகில் சென்று பார்த்தால் ஒரு தாய் மகளுடன் அந்த மிதவை பிடித்துக் கொண்டு அந்த பாடிக் கொண்டிருந்தார். அவர்களை மீட்டு அந்த தாயின் கணவரிடம் சேர்த்தார்கள்.
பலர் மனதைத் தொட்டு ஆண்டவர்பால் ஈர்த்த, இந்த பாடலை எழுத ஆண்டவர் பயன்படுத்திய மனிதர் வேறு யாருமல்ல.

 6000 பாடல்களுக்கு மேலாக எழுதி தேவனை மகிமைப் படுத்திய சார்ல்ஸ் வெஸ்லி. மெத்தடிஸ்ட் என்ற இயக்கம் உருவாக காரணமாக இருந்தவரும் இவரே.

டிசம்பர் திங்கள் 18, 1708ம் ஆண்டு பிறந்த இவருடைய தந்தை சபை போதகர். இவரையும் சேர்த்து இவரது குடும்பத்தில் 10 குழந்தைகள். இதன் காரணமாக இவரது குடும்பம் வறுமையின் கோடுகளை தொடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  அப்படியிருந்தும் அவரைத் தத்தெடுக்க ஒரு செல்வந்தர் முன் வந்த போது அதை அன்புடன் மறுத்தார்.

1729 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, "மெத்தடிஸம்" (Methodism) என்ற முறையை பயன்படுத்தி  உருவகப் படுத்தினார். இதைத் தான் இவரது சகோதரர் மெருகேற்றி  "மெத்தடிஸ்ட்" ( Methodist)  என்ற சமய இயக்கத்தை உருவாக்கினார். நல்ல குடும்ப வாழ்க்கையை நடத்திய இவர், போதிக்க எங்கு சென்றாலும் மனைவியை அழைத்துச் செல்லும் பழக்கத்தை உடையவர். தனது சகோதரர் ஜான் வெஸ்லி வாழ்க்கையில் இடறி நடந்த போது அதை தடுத்து நிறுத்தி, அவர் தேவ பாதைக்கு திரும்ப உதவி செய்தவரும் இவரே.

0 comments: