Wednesday, December 26, 2018
Tuesday, December 25, 2018
திருக்குறள் கிருஸ்தவ நூலே| திரு.வி.க வின் ஒப்புதல் | ஆரியர் அழித்த ஆதி இ...
Posted by his grace at 10:55 AM 0 comments
இயேசுவை போற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் | Veda Ragasiyam | Oliyai thedi
Posted by his grace at 10:53 AM 0 comments
Sunday, December 23, 2018
Satanic Verses Prove that Almighty God is NOT the Author of Quran!!!
Posted by his grace at 11:11 AM 0 comments
Sunday, December 9, 2018
Thursday, December 6, 2018
12 Famous Scientists On The Possibility Of God
- 1Galileo Galilei (1564 - 1642)CREDIT IMAGNO VIA GETTY IMAGES
- 2Sir Francis Bacon (1561 - 1626)CREDIT STOCK MONTAGE VIA GETTY IMAGES
- 3Charles Darwin (1809 - 1882)CREDIT IMAGNO VIA GETTY IMAGES
- 4Maria Mitchell (1818 - 1889)NYPL/SCIENCE SOURCE VIA GETTY IMAGES
- 5Marie Curie (1867 - 1934)SCIENCE SOURCE via Getty Images
- 6Albert Einstein (1879 - 1955)SCIENCE SOURCE VIA GETTY IMAGES
- 7Rosalind Franklin (1920 - 1958)UNIVERSAL HISTORY ARCHIVE VIA GETTY IMAGES
- 8Carl Sagan (1934 - 1996)MICKEY ADAIR VIA GETTY IMAGES
- 9Stephen Hawking (Born 1942)KARWAI TANG VIA GETTY IMAGES
- 10Venkatraman Ramakrishnan (Born 1952)OLIVIER MORIN VIA GETTY IMAGES
- 11Neil deGrasse Tyson (Born 1958)FOX VIA GETTY IMAGES
- 12Francis Collins (Born 1950)Bloomberg via Getty Images
Posted by his grace at 5:41 AM 0 comments
Wednesday, February 14, 2018
சாம்பல் புதன்
எபிரேயத்தில் லெந்து காலம்* என அழைக்கிறோம் கிறிஸ்தவர்களின் புனித நாட்கள் 1), கிறிஸ்து பிறப்பு 2),உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர்
இயேசு விண்ணில் மனிதனாய் பிறந்த தினம் , இரண்டாவது இயேசு கொல்லப்பட்டு மீண்டும் விண்ணுலகில் பிதாவோடு வாசம்பண்ண உயிர்த்த தினம்.
ஈஸ்டர் தினத்துக்கு முன்பு வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த நாற்பது நாட்களைக் நாம் *தவக்காலம்* என ஆசரிக்கிறோம். அந்த தவநாட்களின் ஆரம்பத்தை ஒரு புதன் கிழமையிலிருந்து ஆரம்பிக்கிறோம் எனவே அதை சாம்பற்புதன் என்று அழைக்கிறோம்.
*சாம்பல் புதன் கிழமையிலிருந்து ஈஸ்டர் வரை மொத்தம் 46 நாட்கள் அதில் 6 sunday கழித்து மீதமுள்ளதை 40 நாட்கள் உபவாச நாட்களாக ஆசரிக்கிறோம்*
*இஸ்ரவேல் தேசத்தில் யூதர்களுக்கு ஒய்வு நாள் சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் முதல் நாளாக ஆரம்பிக்கின்றனர்*
*அர்மெனின் கிறிஸ்தவம் ,ஆர்தஸ்டோ கிறிஸ்தவம் பஸ்கா எப்போது வருதோ அதைத்தான் ஈஸ்டர் தினமாக கொண்டாடினர். ஒரு பகுதியினர் இயேசு ஞாயிறு அன்றுதான் உயிர் தெழுந்தார் என்றது. இவ்விதமாய் பலவிதமான குழப்பத்தின் மத்தியில் ஒரு குழு ஒன்று அமைத்து இதற்கு முடிவு கொண்டுவரப்பட்டது*
*நிசேயா கவுன்சில்* *என்ற குழு அமைத்து அவர்கள் முடிவு செய்தனர்.அவர்கள் கூறிய கருத்துப்படி அதாவது அடிமையாக்கப்பட்ட தேவ ஜனம் எகிப்திலிருந்து வெளியே வந்தது பெளர்னமியாயிருந்தது அதாவது வேதத்தின் அடிப்படையில் ஆபிப் மாதம் 14 ம் தேதி*
பெளர்னமி அன்று நிலா முழுமையாக இருக்கும் அதாவது நல்ல வெளிச்சம் கொடுக்கும் ,பஸ்கா கொண்டாடப்பட்டதும் அன்றுதான்.
*ஈஸ்டர்க்கு பழைய ஏற்பாட்டின் பெயர் பஸ்கா*
பஸ்கா கொண்டாட நாம் எடுப்பது மார்ச் 21ம் தேதி அதாவது பகலும் , இரவும் சமமாக இருக்கும் அந்த நாளிலிருந்து எடுத்து அதற்கு பின்பு எந்த பெளர்னமி வருகிறதோ அதற்கு அடுத்த ஞாயிறு தான் நாம் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகிறோம்.
*உதாரணமாக இந்த முறை மார்ச் 21 க்கு அப்புறம் பெளர்ணமி 30 ல் வருகிறது அதற்கு அடுத்த ஞாயிறு 1 ம் தேதி எனவே அதை ஈஸ்டர் தினமாக கொண்டாடுகிறோம்*
நாம் இருலிலிருந்து வெளிச்சத்துக்கு கடந்து வந்து விட்டோம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கிடைத்துவிட்டது என்பதை மையமாக கொண்டும் ,அந்நாளில் சந்திர சூரியனை வைத்துதான் கிழமையும் மாதங்களும் கணக்கிடப்பட்டன எனவே நிசேயா கவுன்சில் பல பிரிவுகளுக்கு பிறகு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர பெளர்ணமியையும் அமாவாசையையும் கணக்கில் கொண்டு வேதத்தின் அடிப்படையில் ஈஸ்டர் நாள் முடிவெடுக்கப்பட்டு. அந்த வெளிச்சத்தின் நாளில் நாம் ஈஸ்டர் கொண்டாட வேண்டும் என்று இடைப்பட்ட ஞாயிற்றுக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே மார்ச் 22 லிருந்து ஏப்ரல் 21 வரை ஈஸ்டர் மாறி மாறி வரும்.
லெந்துகாலம் மனம்திரும்புதலின் காலம் .நம்முடைய பாவங்களுக்காகத்தான் இயேசு சிலுவையில் பலியானார் என்ற சிந்தனையை மனதில் கொண்டு ,நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பும் காலம்.
*தவக்காலத்தின் மையக்கருத்து:-*
நாற்பது என்பது வேதாகமத்தில் முக்கியமான எண்
1), மோசே இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட மனிதன் .எகிப்தியன் ஒருவனை கொன்று விட்டு மீதியானி என்ற இடத்தில் வாழ்ந்த நாட்கள் 40
2), சீனாய் மலையில் மோசே கடவுளோடு இருந்த நாட்கள் 40
3), இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த நாட்கள் 40
4), மோசே எழுதிய விடுதலைப்பயணங்கள் 40 அதிகாரம்
5), இயேசுகிறிஸ்து உபவாசம் இருந்த நாட்கள் 40
1), *இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்தது இந்த வசந்தகாலமாகிய நிசான் என்ற ஆபிப் மாதத்தில்*
2), *எஸ்தர் 9:1 எஸ்தர் உபவாசமிருந்து யூதர்களை காப்பாற்றியது இந்த மாதம் தான்*
3), *யோசுவாவும் ,இஸ்ரவேலரும் யோர்தானை கடந்து அற்புதம் கண்டது இந்த ஆபிப் மாதம் தான்*
4), *ஜலம் வற்றி தரைக்காணப்பட்டு நம்பிக்கை பிறந்ததும் இந்த மாதம் தான் ஆதி 8:13*
இப்படி நாற்பது நாட்கள் வேதாகமத்தில் அதிக முக்கியத்துவமாக உள்ளதால் .உபவாசநாட்களும் வேதாகமத்தின்படி 40 நாட்களாக ஆசரிக்கிறோம்.
*கி.பி 900 ஆண்டு முதல் இந்த சாம்பல் புதன் ஆசரிக்கப்படுகிறதாக அறிகிறோம்.*
*ஏன் சாம்பல்*
சாம்பல் என்பது எல்லோராலும் நிராகரிக்கப்படும் ஒரு பொருள் .உதாசீனத்தின் அடையாளம்.
*பழைய ஏற்பாட்டின் மக்களும் மன்னர்களும் கோணியை ஆடையாய் உடுத்திக்கொண்டு ,சாம்பலில் அமர்ந்து நோன்பு இருப்பார்கள் .உடலெல்லாம் , நெற்றிகளிலும் சாம்பல் பூசுவார்கள்*
இறைவனுக்கு முன்பு நாங்கள் வெறும் சாம்பல் போன்றவர்கள் என்று தன்னை வெறுத்து அர்ப்பணிப்பார்கள்.
தேவனை மகிமைப்பாடுத்துவார்கள்.
இப்போதும் அநேக உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை அர்ப்பணித்து நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளத்தை போட்டு சாம்பல் புதன் கிழமையை ஆசரிக்கிறார்கள்.இது சிலுவையை நினைவுகூறும் அடையாளம்.
*ஏன் உபவாசம்*
உபவாசம் என்பது வெறுப்பதின் அடையாளம்.ஆடம்பரங்கள் , சிற்றின்பங்கள் , தவிர்த்து இறைவனோடு இணைந்திருப்பதே உபவாசம் .
எல்லாரும் உபவாசம் இருக்காங்க நாமும் இருப்போம் என்பது சரியல்ல அதை தேவன் விரும்புவதில்லை , சடங்காச்சாரங்களாக உபவாசிப்பதை விட்டுவிட்டு.... கிறிஸ்துவுக்குள்ளாய் நம்மை ஒடுக்கி ,உணர்ந்து அரப்பணித்து இருப்பதுதான் உபவாசம் .......
*எப்படிப்பட்ட உபவோசத்தை தேவன் விரும்புகிறார்*
ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும் ,துரத்துண்டு சிறுமையானவர்களை வீட்டிலே சேர் த்துக்கொள்கிறதும் ,வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவா தேவனுக்கு உகந்த உபவாசம்.
மத்தேயு 6:17
நீயோ உபவாசிக்கும் போது அந்த உபவாசம் மனுஷருக்குக் காணப்படாமல் ,அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கு காணப்படும்படியாக உன் தலைக்கு எண்ணெய் பூசி உன் முகத்தை கழுவு.
எஸ்றா 8:23
உபவாசம் பண்ணி ஜெபிக்கும்போது தேவன் நம் ஜெபத்தை கேட்பார்.
லெந்து நாட்களில் சாம்பல் புதன் ஆசரிக்கிற நாம் உண்மையோடு தேவனை ஆராதித்து ,நம்மையும் நம்முடைய பாவங்களையும் அறிக்கைசெய்வோம் இயேசுவின் முகத்தை தரிசிப்போம் 40 நாட்களில் நம்மை பரிசுத்தப்படுத்தி தேவனுக்காய் ஒளிவீசுவோம் .ஆமேன்...தேவனுக்கே மகிமை....
Posted by his grace at 10:13 AM 0 comments