Friday, February 9, 2018

இதை படிங்கள் 💪கிருஸ்துவர்கள்💪 யாரு என்று தெரியும்.👇

👇
குர🐵ங்கு ஒன்று
தே🌲க்கு மர🌳த்தின் குளிர்ச்சியான நிழலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது.

அப்போது கா🌪️ற்று சற்று பலமாக வீசவே தே🌲க்கு மரத்திலிருந்த உலர்ந்த கா🌰ய்கள் பொத்து பொத்தென்று
குர🐒ங்கின் மேல் விழுந்தன.
கற்களால் அடிபட்டது போல் எழும்பிய வலியில் குர🐵ங்கு,
" ஐயய்யோ ,
எவனோ கல்லால அடிக்கிறானே " என்று
அல🙊🙉🙈றியபடியே
வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தது.
              
எழுந்த பிறகு தான் தெரிந்தது
அவை
மரத்தி🌳லிருந்து உதிர்ந்த காய்கள் என்பது.
குர🐒ங்குக்கு தேக்கு மரத்தின் கா🥑🥝ய்கள் மேல் பொல்லாத கோபம் வந்து விட்டது.

"உங்களை என்ன பண்றேன் பாரு " என்று அவற்றைக் காலால் ஓங்கி ஓங்கி மிதித்தது.
கால் தான் வலித்ததே தவிரக் காய்க🌰🥝ளுக்கு ஒன்றுமே நேரவில்லை...!!!

குரங்கின் முட்டாள்தனத்தை மரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த...
கு🐦ருவி ஒன்று
குர🐒ங்கிடம் கேட்டது ,
" குரங்க🐒ண்ணே , என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ??? "
குர🐵ங்கு சொன்னது ,
இந்தக் காய்க🌰ளைப் பழிவாங்கணும்னு பாக்குறேன்.
ஆனா
அதுங்களுக்கு ஒண்ணுமே ஆகமாட்டேங்குது.

கு🐦ருவி சொன்னது ,
இதுங்களைப்
பழி வாங்க
ஒரே வழி ,
மண்ணில
குழி பறிச்சு
இது🌰ங்களை ஒவ்வொன்னா புதைச்சு வைக்கிறது தான்.
புதைச்சு அது மேல கொஞ்சம்
தண்ணி ஊத்தி வச்சிட்டா....
அது அப்படியே மக்கிப்போய் மண்ணோட மண்ணாயிடும் . அப்படி
இல்லன்னா... தண்ணி💧ல தூக்கி வீசினாலும் அப்படியே அழுகிப் போயிடும் "
என்றது .

கு🐦ருவி சொன்னதை உண்மையென்று நம்பிய குர🐒ங்கு அன்று முதல்
தேக்கு
விதை🌰களைத்
தேடித்தேடிப் பிடித்துப் பழிவாங்கி வருகிறது.
அது ஆற்றில் எறிந்த விதை🥝🥑கள் வெகு தூரம் பயணித்துக் ,
கரை ஒதுங்கும் இடமெல்லாம் தேக்குத்
தோ🌲🌳ப்புகள் உருவாகி வருகின்றன. புதைக்கப்பட்ட
விதை🥝🥑🌰கள் வளர்ந்து மர🌲மாகிக் காட்டை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
இன்று வரை...
மு🙈🙉🙊ட்டாள்
குர🐒ங்கு "பழி" வாங்குவதாக நினைத்துக் கொண்டு...
அதைப் பெருகச் செய்து கொண்டே இருக்கிறது.

பிரியமானவர்களே ,
ஊழியங்களை ஒழிப்பதாக நினைத்து ,
பிசா😈சும் இப்படித்தான் நம்மைப் புதைப்பதும் , தொலை தூரம் போய் விடும் படி வீசியெறிவதுமான காரியங்களை செய்து வருகிறான் .  நாம் அக்கி♨️னியில் எறிப்பட்டாலும் ஆயிரங்களாய் முளை🌱🌾த்துப் பரம்புகிற வி✝️தைகள் என்பது அவனுக்குக் தெரியாதல்லவா ???

ரோமர் 8:36 சொல்வது போல...

கிறிஸ்து☦️வின்
அ💟ன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார் ??? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ,
பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ ??? "
இப்படி அ👹வன் எந்தத் துன்பத்தில்
நம்மைப் புதைக்க எண்ணினாலும் , நாம் தான் விருட்ச🌲🌲🌳மாக எழுந்து நிற்போமே ..!!!.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை
மணி🌰யானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பல🍇🍑🍒🍓🍎னைக் கொடுக்கும்
(யோவான் 12:24)

0 comments: