ஜான் வெஸ்லி-யிடம்
ஊழியர்களே கற்றுக்கொள்ளுங்கள்!
ஆண்டவருக்காக
செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது
என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
இவர் தன் வாழ்நாளில் 4லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையிலேயே பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் தேவனைப் பற்றி பிரசங்கம் செய்வார். நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் சுற்றுவார். இப்படி 40 ஆண்டுகள் தனது பயணத்தை நடத்தினார்.
பயணத்தின் ஊடே அவர் 400 புத்தகங்களையும் எழுதி முடித்து விட்டார். 4 ஆயிரம் பிரசங்கங்களை செய்துள்ளார். பத்து மொழிகளையும் பேசக் கற்றுக்கொண்டார்.
இப்படியே 83 வயது வரை சுறுசுறுப்பாகவே நடந்தது. என்ன தான் இருந்தாலும் முதுமை மனிதனை தள்ளாடச் செய்யுமே!
தொடர்ந்து 18 மணி நேரம் வரை எழுதக்கூடிய அவர், ""இப்போதெல்லாம் என்னால் 15 மணி நேரம் கூட தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. அவ்வாறு எழுதினால் கண்கள் களைப்படைந்து விடுகின்றன. அது மட்டுமல்ல! தினமும் இரண்டு தடவைக்கு மேல் பிரசங்கம் செய்ய முடியவில்லை. இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
முன்பெல்லாம் காலை 5.30 மணிக்கு எழுந்து விடுவேன். இப்போது இன்னும் கொஞ்சம் தூங்கலாமே என்ற எண்ணம் மேலிடுகிறது,'' என்று வருத்தப்பட்டு தன் டைரியில் எழுதி வைத்திருந்தார்.
இவர்களைப் போன்ற உழைப்பாளிகளைப் பார்த்து நாம் திருந்த வேண்டும்.
தேவனுடைய ராஜ்யத்துக்காக உழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
உண்மையும் உத்தமமும் சுறுசுறுப்பும் வாய்ந்த ஊழியர்களைத் தேவன் தேடுகிறார். சோம்பேறித்தனத்தை அறவே ஒழியுங்கள். தேவபணியை விருப்பத்துடனும், உற்சாகத்துடனும் செய்யுங்கள்.
-இவ்வாறு "சம்ஸ்" என்ற எழுத்தாளர் தன்னுடைய வலைபதிவில் தேவபணியை குறித்து குறிப்பிடுகிறார்.

0 comments:
Post a Comment