Jebam
🌹நாம் ஆலய ஆராதனையில் பங்கெடுப்பது குறித்தோ, வைராக்கியமாய் ஊழியம் செய்வதை குறித்தோ சாத்தான் கவலைப்பட மாட்டான்.
ஆனால்
🌹 நாம் எந்த அளவு ஜெபத்தில் கவனமாயிருக்கிறோம் என்பதை பார்த்தால் சாத்தான் கலங்கி விடுவான்.
🌹 சாத்தானுடைய அம்புகள் ஜெபத்தை தான் குறி வைக்கின்றன.
🌹நாம் ஜெபிக்காமல், ஊழியம் செய்யலாம்,
🌹ஜெப ஜீவியம் இல்லாதவர்கள் தேவனை ஆரவாரமாய் ஆராதிக்கலாம்.
🌹 தேவனோடு ஜெபத்தின மூலம் நெருங்கிய உறவு
வைத்திராமல் நாம் செய்யும் அனைத்தும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்தவன் பிசாசானவன்.
🌹 எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக ஜெபத்தையே குறி வைக்கிறான்.
🌹 ஜெபத்தை தடுப்பதற்கே எல்லாவிதத்திலும் முயற்சி செய்வான்.
💁♂அந்த ஜெபத்தை தடுத்து விட்டால்,
🌹 எல்லாவித பாவத்தையும் உட்புகுத்தி விடலாம், மனசாட்சியை மழுங்க செய்து இதயத்தை உணர்வற்றதாக்கி விடுவதுதான் பிசாசானவனின் நோக்கம்.
🌹'ஜெபமே முக்கியம்' ஜெபமே ஜெயம்' ஜெபமே பாவத்திலிருந்து நம்மை தப்புவிக்கும்' என்றெல்லாம் சொல்கிறோம், பாடுகிறோம்
🌹 நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்தவ ஒழுங்கிற்காகவோ, கடமைக்காகவோ செய்யலாம்.
💁♂அதாவது
🌹ஜெபம் வெறும் வார்த்தைகளாய் இராமல் இருதயத்தின் ஏக்கமாய் இருக்க வேண்டும்.
💁♂அப்படிப்பட்ட ஜெபம் உயிருள்ளதாகவும், சிறுபாவம் இருதயத்தில் நுழைந்தாலும் அதை உணர்த்துவதாகவும், தேவனோடுள்ள உறவை கட்டி எழுப்புவதாகவும் இருக்கும்
🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
0 comments:
Post a Comment