Sunday, December 31, 2017

Who Will Cry When You Die?"

*Who Will Cry When You Die?"           ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"

*ஆனந்தமாக வாழுங்கள்

பைபிள் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன??

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக பைபிள் சொல்கின்றது.

இதை #அறிவியல் உண்மை மெய்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
*The Greatest Physician*

பைபிள் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன??

இலவசம்

ஓர் முதியவர் தனது பேரனிடம்.:

பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

பேரன்: அது எப்படி தாத்தா?

முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

மது அருந்த பணம் வேண்டும்

சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!

அன்பு காட்ட பணம்
தேவையில்லை

கடவுளை வணங்க பணம்
தேவையில்லை

சேவை செய்ய பணம் தேவையில்லை

விரதம் இருக்க பணம் தேவையில்லை

பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை

பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

மகனே!
*நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சுவர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக.

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள

". நாளையத்தினம், தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு, அதினதின் பாடுபோதும்" (மத். 6:34).

ஒரு நாளுக்கு மொத்தம் 24 மணி நேரமுண்டு. அதற்கு 1440 நிமிடங்கள். அல்லது 86400 வினாடிகள். அப்படியானால், "ஒரு வருஷத்துக்கு எத்தனை வினாடி நேரம்?" என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு சுவர் மீது பொருத்தப்பட்ட பெரிய கடிகாரம், தன் அசைவாட்டை (பெண்டுலம்) இயக்கி ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று அதற்கு தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலை வந்தது. ஒரு வினாடிக்கு இரண்டு முறை அங்குமிங்குமாக, டிக் டிக்கென்று ஒலித்தால், ஒரு வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும்போது, எத்தனையோ கோடி முறை ஒலிக்க வேண்டியதிருக்கும்! என்று எண்ணி பெருமூச்சு விட்டது.

அப்படியானால், "பத்து ஆண்டுகளில்..." என்று நினைக்கும்போதே, நரம்புத் தளர்ச்சியும், மாரடைப்பும் வருவதுபோல இருந்தது. அருகிலிருந்த கைக்கடிகாரம் இந்த சுவர் கடிகாரத்தைப் பார்த்து, "அடா முட்டாளே, ஒரே நேரத்தில் ஒரு டிக் டிக் தானே ஒலிக்கிறாய்? அது எளிதானது. அதை செய்ய முடியாதா? ஏன் வருங்காலத்தை எண்ணி கலங்குகிறாய்?" என்றது. தேவபிள்ளைகளே, உங்களுக்குக் கொடுத்திருக்கிற நிகழ்காலத்தில், உங்களுடைய வினாடி நேரங்களை நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களென்றால், அது தன்னுடைய மணி நேரங்களை பொறுப்பெடுத்துக் கொள்ளும். கர்த்தர் மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், அவர், உங்களுடைய எதிர்காலத்தைப் பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்.

கடந்த காலத்தைக் குறித்து கவலைப்படாதிருங்கள். வருங்காலத்தை எண்ணி சோர்ந்து போகாதிருங்கள். நிகழ்காலம், உங்களுடைய கைகளிலிருக்கிறது. தேவபெலத்தோடு ஒவ்வொரு வினாடி நேரத்தையும், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிலர் வருங்காலத்தைக் குறித்து கவலைப்பட்டு கலங்கி, நிகழ்காலத்தை கோட்டை விட்டுவிடுவார்கள். கண்ணீரில் கழித்துக்கொண்டிருப்பார்கள். "அன்றன்றுள்ள தேவைகளை" ஆண்டவர் ஒவ்வொருநாளும் உங்களுக்குத் தர வல்லமையுள்ளவர். வனாந்தரத்தில் கர்த்தர் மன்னாவை அருளினபோது, ஒரு வாரத்துக்குரியதை, ஒரு மாதத்துக்குரியதை சேர்த்துக் கொடுக்கவில்லை. அன்றன்றுள்ள எல்லா தேவைகளையும் அன்றன்று கிருபையாய் சந்தித்தார்.

காலைதோறும், மன்னாவைப் பொழிந்தருளினார். ஆம், காலைதோறும் அவருடைய கிருபைகள் புதிதானவைகள். "ஆண்டவரே, இன்று எனக்கு நீர் போதுமானவர். இன்று என்னைப் பெலப்படுத்தி, சகாயம் செய்யும். இன்று என்னை நீர் வழிநடத்தும்" என்று ஜெபிப்பீர்களானால், கர்த்தர் வருங்காலத்தை ஆசீர்வாதமாக்கி, உங்களுக்குத் தந்தருளுவார். ஒரு உக்கிராணக்காரன், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். பேங்கில் வேலை செய்யும் குமாஸ்தா, தன் கையில் கொடுக்கப்பட்ட லட்சம் லட்சமான பணத்துக்கு மட்டுமல்ல, பைசாவுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்.
அதுபோல தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நேரத்துக்காகவும், நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டும் அல்லவா? கர்த்தரை துதிப்பதற்கும், வேதம் வாசிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும், போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால், நித்திய நித்தியமாக, கர்த்தரோடு மனமகிழ்ந்து களிகூரும் நேரங்கள் வேகமாய் வருகிறது.

நினைவிற்கு:- "முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்" (ஏசா. 43:18,19).

எவைகளில் உறுதியாக இருக்க வேண்டும் →*

1) ஜெபத்தில் - ரோ 12-12

2) விசுவாசத்தில் - 1 பேது 5-9

3) பெலத்தில் (ஆவிக்குரிய) - சங் 73-4

4) தேவ பக்தியில் - யோபு 4-6

5) கர்த்தரை பற்றி கொள்வதில் - ஏசா 26-3

6) மனதில் - ரூத் 1-18

7) உத்தமத்தில் - யோபு 2-3

8) கர்த்தருக்கு முன்பாக - 1 இரா 2-45

9) உபதேசத்தில் - அப் 2-42

10) ஜக்கியத்தில் - அப் 2-42

11) ஆவியில் - பிலி 1-27

12) புத்திமதியை பற்றி கொள்வதில் - நீதி 4-13

13) வழிகளில் (ஆவிக்குரிய) - யோபு 17-9

14) நம்பிக்கையை அறிக்கையிடுவதில் - எபி 10-23

15) அப்பம் பிட்குதலில் - அப்போ 2-42

Why jews missed jesus

Why Jews Missed Jesus..?

They were looking for a Lion,
He came as a Lamb,
     and they missed Him.
They were looking for a Warrior,
He came as a Peacemaker,
     and they missed Him.
They were looking for a King,
He came as a Servant,
     and they missed Him.
They were looking for Liberation from Rome,
He submitted to the Roman cross,
     and they missed Him.
They were looking for a fit to their mold,
He was the mold maker,
     and they missed Him.
What are you looking for?
    Lion?
    Warrior?
    King?
    Liberator?
They were looking for their temporal needs to be met,
He came to meet their eternal need,
     and they missed Him.
He came as a Lamb to be sacrificed for your sin.
     Will you miss Him?
He came to make peace between God and man.
     Will you miss Him?
He came to model servanthood for all mankind.
     Will you miss Him?
He came that we might have true Liberty.
     Will you miss Him?
He came to give you eternal life.
     Will you miss Him?
When we submit to the Lamb,
    we will meet the Lion.
When we join with the Peacemaker
    we will meet the Warrior.
When we work with the Servant
    we will meet the King.
When we walk with the Submitted
    we will meet the Liberator.
When we concern ourselves with the eternal
    we will have the temporal.
Lets not miss Jesus....

Help

உதவி

உலக பணக்காரர்,
கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார்.
"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?"
*ஆம்.  ஒருவர் இருக்கிறார்*
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  எனவே, அதை விடுத்தேன். அப்போது,
ஒரு கருப்பினச் சிறுவன்,  என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,
இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.
*19 வருடங்கள் கழிந்தன.*
நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.
அவனைக் கேட்டேன்.
"என்னைத் தெரிகிறதா ?"
"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த *பில்கேட்ஸ்*"
பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன்.  தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.
*"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது."* என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....
*""ஏன் ? "*என்றேன் நான்.
அந்த இளைஞன் *"நான் ஏழையாய் இருந்த போது* , *உங்களுக்குக் கொடுத்தேன்* *ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.*
*ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? "* என்றான்...
*கருப்பு இளைஞன் தான் என்னை விடப்* *பணக்காரன் என்பதை* *உணர்ந்தேன்.""* *என்றார் பில்கேட்ஸ்.*
*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க* *வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும்* *வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....*
*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது  கிடையாது*

Woman

பெண்

பெண்களிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்புகள்
1)  அதிகாலையில் எழும்ப வேண்டும்
நீதி 31:15
2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதி 31:20
3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதி 31:29
4) தேவ பயம் இருக்க வேண்டும்  - நீதி 31:30
5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதி 12:4
6)  புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4
7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதி 11:16
8)கணவரிடம் பயபக்தி யாய் இருக்க  வேண்டும் - எபேசி 5:33
9) அமைதியாக இருக்க  வேண்டும் - 1 பேது 3:4
5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் - கொ 3:18
10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:11
11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த  கூடாது  - 1 தீமோ 2:12
12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்  - 1 தீமோ 2:10
13) தெளிந்த புத்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10
14) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோ 2:10
15) தேவ பக்தி இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:10
16) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15
17) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15
18) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15
19) கோபக்காரியாக இருக்க கூடாது  நீதி:21:19
20) சண்டைகாரியாக இருக்க கூடாது நீதி:21:19
21) புத்தி இருக்க வேண்டும் - நீதி 14:1
22) ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும் - நீதி 14:1

கடவுள் இல்லையா?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட
மீசையை ட்ரிம்
பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு.
அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட
பேசிக்கிட்டே தன்னோட வேலையையும்
பார்க்கிறாரு...
அப்ப அவங்க பேச்சு கடவுள்
இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்டுக்குள்ள போச்சு...
அப்ப அந்த முடி திருத்துபவர்,
"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான்
நம்பவில்லை.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஓகே... நீங்க இப்ப நம்ம தெருவுல
நடந்து பாருங்க... அப்ப
உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.
கடவுள்
இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக்
குழந்தைகள்? ஏன்
இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால்
நோயும் இருக்காது வலியும் இருக்காது.
கடவுள்
அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக
இதனை அனுமதிக்க வேண்டும்?"
இதற்கு பதில் சொன்னால் அது பெரிய
வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த
கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல்
கடையை விட்டு வெளியேறுகிறார்.
அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக
நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான
தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு
மீண்டும் கடைக்குள்
சென்று அந்த முடி திருத்துபவரிடம்,
"உங்களுக்கு ஒன்று தெரியுமா?
முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"
அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன்.
உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான்
இருக்கிறேன்."
"இல்லை... அப்படி முடி திருத்துபவர் என்பவர்
இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும்
ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல
ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."
முடி திருத்துபவர், "நாங்கள் இருக்கிறோம். ஆனால்
எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான்
இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக
முடியும்?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான்
கடவுள் என்பவர் இருக்கிறார்.
மக்கள் அவரைத் தேடி, சரணடையாமல்
கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
- இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்...
*"நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்..."* (1நாளாகமம் 28:9).
*"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைக் கண்டுபிடிப்பீர்கள்; நான் உங்களுக்கு காணப்படுவேன்."* (எரேமியா 29:13-14).  
ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.
இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்!"’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்! 
*"கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே..."* (அப்போஸ்தலர் 17:27).

இயேசுகிறிஸ்து ஜெபித்த விதங்கள்

இயேசுகிறிஸ்து ஜெபித்த விதங்கள்...*

"அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,"எபிரேயர் 5:7
1. முழங்ககாற்படியிட்டு ஜெபித்தார்.
லூக்கா 22:41,42.
2. முகங்குப்புற விழுங்து ஜெபித்தார்.
மத்தேயு 26:39.
3. பலத்த சத்தத்தோடு ஜெபித்தார்.
எபிரேயர் 5:7.
4. கண்ணீரோடு ஜெபித்தார்.
லூக்கா 19:41;
எபிரேயர் 5:7.
5. மிகுந்த வியாகுலத்தோடு ஜெபித்த்தார்.
லூக்கா 22:44
6. அதிக ஊக்கத்தோடு ஜெபித்த்தார்.
லூக்கா 22:44.
7. இரத்த வேர்வையோடு ஜெபித்தார்.
லூக்கா 22:44.
*ஜெபம் நமக்கு தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுத்தருகிறது.*

God's servant

ஊழியருக்கு....


1. ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு!
2. ஊழியன் என்றால் "வேலைக்காரன்" என்றே அர்த்தம்!
3. எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே..
4. சின்ன ஊழியம்; பெரிய ஊழியம் என்றெல்லாம் கர்த்தர் பிரிப்பதில்லை!
5. கர்த்தர் உங்கள் பெலத்தையோ; அறிவையோ பார்ப்பதில்லை. வாஞ்சையோடு வந்தால்; அர்ப்பணித்தால், அவர் உங்களைப் பயன்படுத்த வல்லவர்!
6. பரிசுத்த வேதாகமத்தை 2 அல்லது 3 முறையாவது, ஜெபத்துடன் முழுமையாக வாசித்திருப்பது நல்லது.
7. சம்பாதிக்க ஊழியம் ஆரம்பித்தால், அழிந்துபோவது நிச்சயம்!
8. விசுவாசத்தோடு ஊழியம் செய்ய வாருங்கள். கர்த்தர் உங்களைப் பிழைப்பூட்டுகிறவர்.
9. ஜெபம்; உபவாசம்; வேத தியானம்; விசுவாசம்; அழைப்பில் உறுதி; உண்மை; பரிசுத்தம்; தாழ்மை; ஆயத்தம்; பரிசுத்த ஆவிக்குள் வளர்ச்சி; கிருபையின்மேல் நம்பிக்கை; உதவும் குணம் இவையே முக்கிய தேவைகள்.
10. எந்த ஊழியரின் ஊழியத்தையோ, பிரசங்க உடல்மொழியையோ; வார்த்தை ஜாலத்தையோ காப்பியடிக்காதீர்கள். உங்களுக்கென கர்த்தரிடம் தனிச்சிறப்பு உண்டு! ஒரே மோசே; ஒரே யோசுவா; ஒரே தாவீது; ஒரே தானியேல் போல நீங்களும் ஒருவரே! கர்த்தர் நம்மோடு இருக்கிறாரா என்பதே முக்கியம்!
11. பிரசங்கத்துக்கான காரியங்களை முக்கியமாக பைபிளில் மட்டுமே தேடுங்கள். சுயஅனுபவங்கள் எப்போதுமே நல்விளைவை ஏற்படுத்தாது.
12. வேதவார்த்தைகளைத் தாண்டி தீர்க்கதரிசனங்களும் இல்லை; நல்வாழ்வும் இல்லை என்பதில் உறுதியாய் இருங்கள்!
13. எந்த மனிதருக்காகவும், வேதவார்த்தைகளை மாற்றாதீர்கள்!
14. சபைமக்களை தேவகிருபைக்கு நேராய் மட்டுமே நடத்துங்கள்! ஆசீர்வாத அலப்பல்கள் எப்போதும் வேண்டாம். வாழ்வு, கர்த்தருக்குப் பிரியமாய் மாற
மாற ஆசீர்வாதங்கள் தானாய் வரும் என்று கற்றுக்கொடுங்கள்!
15. பிரசங்கம் செய்யும்போது, எப்போதும் கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். மக்களின் கண்களையே பார்த்து, தேவ அதிகாரத்தோடு, ஆவியானவரின் பெலத்தோடு பேசுங்கள். சுயம் வெளிப்படாதபடி கவனமாயிருங்கள்!
16. எதிர்பாலரை அதிகமாக பார்த்து பிரசங்கம் செய்தல், முரண்பட்ட கருத்துக்களை கொண்டுவரும் என்பதில், எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.
17. பிரசங்கத்தில், குறிப்பிட்ட சகோதரியை / சகோதரனை அடிக்கடி பெயர் சொல்லி குறிப்பிடுவது நல்லதல்ல.
18. அமர்ந்து கேட்கும் மக்கள், ஆடை ஒழுங்கில் கவனமாயிருக்கமாட்டார்கள். தேவபிள்ளைகள் தங்கள் ஆடைகள்; அமரும் நிலை எல்லாவற்றிலும் ஒழுங்கும்;
கிரமமுமாய் இருக்க போதியுங்கள். சாத்தான் எவ்வழியிலும் ஊழியர்களை சோதிக்கக் கூடும்.
19. வாலிபரோ; பெண்களோ தனித்து ஜெபிக்க வந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது சபை மூப்பர்கள் அல்லது உடன் ஊழியர்களை கட்டாயம் உடன்
வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
20. பிரசங்கம் என்பது உங்கள் தேவைகளையும், திட்டங்களையும் பட்டியலிடுவது அல்ல. வேத வார்த்தைகளை, ஆவியின் சிந்தையோடு, பகுத்து போதிப்பது.
21. உங்கள் சபையை விட்டுவிட்டு அடிக்கடி, வெளியூர்; வெளிநாட்டுக்கு பறக்காதீர்கள். உங்கள் மந்தையை, வேறொரு மேய்ப்பன் மேய்ப்பது, தேவதிட்டமல்ல.
22. ஆராதனையில் ஒழுங்கு அவசியம். கூத்து, கும்மாளம், ஆடலோடு பாடல், புகை, இரைச்சல், அநாவசிய இசை இவையெல்லாம் கர்த்தர் அருவருக்கும்
செயல். பரவசம் அல்ல பரிசுத்தமே முக்கியம்!
23. விசுவாசிகளுக்கு உணவு ஆயத்தம் செய்திருந்தால், அவர்களொடு சேர்ந்தே உண்ணுங்கள். அளவாக!
24. ஊழியங்களுக்குச் செல்லும்போது, குடும்பமாகவோ, உடன் ஊழியர்களோடோ, குழுவாகவோ செல்வதே எப்போதும் நல்லது.
25. பணக்கார விசுவாசி, ஏழை விசுவாசி என்றெல்லாம் கர்த்தர் வேறுபடுத்துவதில்லை. நீங்களும் அப்படியிருக்கவேண்டும் என்று சொல்லத்தேவையில்லை.
26. தனிமையில் அடிக்கடி ஜெபித்து, தேவசமூகத்தில் காத்திருக்கும்போது ஊழியத்தில் வரும் இடர்களிலிருந்து, ஆவியானவர் காப்பாற்றுவார்.
27. எந்த ஊழியரையும் குறைசொல்லாதீர்கள். குறையுள்ள மனிதரையே கர்த்தர் தெரிந்தெடுக்கிறார். நாமும் அப்படித்தான்.
28. காணிக்கைகள் தவறாக (உல்லாச வாழ்வுக்கு) பயன்படுத்தல்கூடாது. ஊழியத்துக்கு உங்களையே கொடுத்த நீங்கள், உங்களுடையதையும் கொடுக்க
ஆயத்தமாயிருக்கவேண்டும்.
29. உங்களோட நடை, உடை, பாவனைகள் கர்த்தரை மகிமைப்படுத்துமளவு சுத்தமாய், நேர்த்தியாய் (பகட்டாய் அல்ல) இருக்கட்டும்.
30. ஊழியம் செய்யவேண்டிய இடத்துக்கு சுமார் 1/2 மணி நேரமாவது முன்னதாகவே செல்வது நல்லது. தாமதமாய் செல்வது மக்களுக்கே பிடிக்காது. ஆண்டவருக்குப் பிடிக்குமா?
31. செய்திவேளை 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை போதுமானது. பின்னர் மக்களின் கவனம் குறையவும், சிதறவும் வாய்ப்புக்கள் அதிகம்.
32. பிறர்மேல் , மற்றும் குறிப்பாக வாலிப பெண்கள் மேல் தேவையின்றி கைகள் வைக்கவேண்டாம்..

*சேரக்கூடாது யாருடன் ?​*

*சேரக்கூடாது யாருடன் ?​*
*1) அலப்புகிற வாயனோடு - நீதி 20-19*
*2) மதுபான பிரியரரோடு - நீதி 23-20*
*3) பெருந்திண்டி காரரோடு - நீதி 23-20*
*4) விபசாரக்காரரோடு - 1 கொரி 5-11*
*5) பொருளாசை காரரோடு - 1 கொரி 5-11*
*6) விக்ரக ஆராதனை காரரோடு - 1கொரி 5-11*
*7) உதாசினரோடு - 1 கொரி 5-11*
*கொள்ளைகாரன் உடன் - 1 கொரி5-11*
*9) வஞ்சகரோடு - சங் 26-4*
*10) வசனத்துக்கு கீழ்படியாதவர்கள் உடன் - 1 தீமோ 3-4*
*11) கலககாரரோடு - நீதி 24-21*

க்ளாரிந்தா - கிறிஸ்தவ வரலாறு - திருநெல்வேலி


திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முதலாக கிறிஸ்தவ ஆலயம் எப்பொழுது எழுப்பப்பட்டது என்று தெரியுமா?
1778ம் ஆண்டில்..பாளையங்கோட்டையில் கட்டப்பட்டது.
யாரால் கட்டப்பட்டது?
க்ளாரிந்தா என்ற அம்மையாரால் கட்டப்பட்டது.
க்ளாரிந்தா அம்மையார் என்பவர் யார்?
உடனே சொல்லிவிடுவீர்கள்..அவர் ஒரு வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த ஒரு மிஷனரி என்று.
இல்லை..இல்லவே இல்லை.
அவர் தஞ்சாவூர் பகுதியைச் சார்ந்த மிகவும் வைராக்கியமான ஒரு பிராமின் சமூகத்தைச் சார்ந்தவர். (ஆதாரம் : http://csitirunelveli.org/profile/history/missionaries/)
இவர் எப்படி கிறிஸ்தவ ஆலயத்தைக் கட்டியிருக்க முடியும்?
இவர் எப்படி கிறிஸ்தவராகியிருக்க முடியும்? பணம் பெற்றுக் கொண்டா கிறிஸ்தவர் ஆனார்?
இவருடைய கணவர் மரித்துப் போய்விடுகிறார். கணவனை இழந்த பெண்களுக்குத்தான் உயரிய மரியாதை அளிக்கும் சமூகம்தானே நம் இந்திய சமூகம்?
ஆம்..அந்த உயரிய வழக்கத்தின்படியே, அந்தப் பெண்ணை மொட்டையடித்து, வெள்ளையாடை உடுத்தி, கணவனின் சிதையில் உடன்கட்டை ஏற்றிக் கொலை செய்வதற்குக் கொண்டு போனார்கள்.
எவ்வளவு உயர்ந்த பாரம்பரியம் கொண்டது நமது இந்தியா?
பெண்களை கிள்ளுக்கீரையாய்கூட அல்ல, அதை விடவும் கேவலமாக நடத்தியதுதானே நம் சமூகம்?
கணவன் இறந்து போனால் ஏன் பெண்களுக்கு மொட்டையடிக்கவேண்டும்?
அவளைப் பார்த்து, பிற ஆண்களுக்கு காம உணர்ச்சிகள் வந்துவிடக்கூடாதாம்.. அவள் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்..வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும்..பிறரது முகத்தில் விழித்துவிடக்கூடாது..உப்பில்லாப் பண்டம் சாப்பிடவேண்டும்..
சரி..தலையை மொட்டையடித்து, வெள்ளையாடை உடுத்தியபிறகும் அவள் பிறர் கண்களுக்கு அழகாகத் தெரிந்தால் என்ன செய்யலாம்?
அவளை உயிரோடு எரித்துவிடவேண்டும்..உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில்.
இதுதானே வழக்கம்?
மனைவியை இழந்த ஆணை என்ன செய்தீர்கள்?
அடப் பாவிகளா?
இதுதான் தர்மமா?
இந்தக் காட்சியைக் கண்ட ஆங்கிலேயப் பிரபு ஒருவர் அவளை மீட்டு, காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறான். அவன் மூலமாகத்தான் கிறிஸ்தவத்தை அவள் அறிந்து கொள்கிறாள்.
வேதம் வாசிக்க ஆரம்பிக்கிறாள்..கிறஸ்தவப் பெண்ணாக மாறுகிறாள். தன்னைப் போல் வேறு ஒரு பெண்ணிற்கு இந்தப் பூமியில் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று முடிவு செய்கிறார்.
கிறிஸ்தவம் குறித்துப் பிற பெண்களுக்குப் போதிக்க ஆரம்பிக்கிறார். சக மனிதனையும் தன்னைப் போல் நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.
பெண்களின் உயிரும் விலை மதிப்பில்லாததுதான்..என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த ஆரம்பிக்கிறார்.
தன் கையிருப்பையெல்லாம் விற்று ஒரு சிறிய கூரை ஆலயத்தைப் பாளையங்கோட்டையிலே கட்டி முடிக்கிறார்.
அதைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியாத அவரது சமூகத்தினர் அதை தீயிட்டுக் கொளுத்துகின்றனர்.
அதன்பிறகுதான் மக்கள் மனதில் ஒரு பெரிய விழிப்புரை வர ஆரம்பிக்கிறது.
கிறிஸ்தவம் என்றால் என்ன? ஏன் நாம் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
கிறிஸ்தவம் இங்கு வேகமாய் பரவ ஆரம்பித்தது.
இந்த க்ளாரிந்தா ஆலயம் பிறகு செப்பனிடப்பட்டு,தற்போதும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. (பார்க்க : படம்.) இதன் அருகில்தான் வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் துரையின் சமாதி இருக்கிறது. அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதில் நமக்குச் சொல்லப்பட்டிருப்பதிலும், உண்மைக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது.
கல்வி நிலையங்கள் ஏராளமாய் ஆரம்பிக்கப்பட்டது. உயர்ந்த ஜாதியின ஆண்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்றிருந்த நிலையை உடைத்து, எல்லோரும் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கிறிஸ்தவம் கொண்டுவந்தது.
நீ தாழ்ந்த ஜாதி என்று பிறர் பேசும் போது, நான் எதில் தாழ்ந்தவன் என்று எதிர் கேள்வி கேட்க அவன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.
நாடார்களை இந்த சமூகம் மிகவும் இழிவான நிலையில் வைத்திருந்தது. நாடார் குலப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது. தங்கள் மார்புகளை துணியால் மறைக்கவும் கூடாது என்றிருந்ததை நாம் மறக்க முடியுமா?
அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது..கிறிஸ்தவமும், வைக்கம் பெரியாரும்தான்.
இந்த இழி நிலையைக் கண்டு கொதித்து எழுந்துதான் நாராயணசாமிகள் உருவானார்கள்.
ஆலயத்திற்குள் மட்டுமல்ல கருவறைக்குள்ளும் நாங்களும் செல்வோம்..நாங்களும் தலையில் பரிவட்டம் கட்டுவோம்..நாங்களும் பூணூல் அணிவோம் என்று எழுந்தார்கள்..
பல ஜாதியர்... பிற மதத்தினர் கிறஸ்தவர்களாக மாறினார்கள்..ஒரு பகுதி நாராயணசாமி வழிபாட்டிற்கு மாறினார்கள்..சிலர் சுயம்புவாய் எழும்பியதை இறைவனாக்கி வணங்க ஆரம்பித்தார்கள்..
இதில் பணம் எங்கிருந்து வந்தது?
மாறியது மனங்கள்தான்..மதங்கள் அல்ல.
எது, என்னை.. சக மனிதனைப் போல வாழவும், பழகவும் தடை செய்கிறதோ..அதை விட்டு விட்டு, அதிலிருந்து வெளியே வர எது கை கொடுத்ததோ..அதை ஆரத் தழுவிக் கொண்டார்கள்.
இவைகளில் பாதிக்கப்பட்ட மற்றொரு பிராமணர் தான் , கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவி ஸ்டீபன் வேதமுத்து என்று கிறிஸ்தவர் ஆனார். தன் கிராமத்தில் உள்ள சொத்தையெல்லாம் விற்று, அருகில் உள்ள ஊருக்கு வந்தார்.
1919ல் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்.. பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.
இதோ..95 ஆண்டுகள் ஆகிறது. இந்த 95 ஆண்டுகளில் எத்தனையோ ஆயிரம் மாணவர்கள் .இங்கு கல்வியைப் பெற்றிருக்கின்றார்கள். அதில் யாருக்கென்ன நஷ்டம் வந்துவிட்டது?
இன்றைக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள், இந்தியாவில் இத்தனை எழும்பப்போய்தான், பல கோடிக்கணக்கான மக்களுக்கு இங்கு கல்வி போய் சேர்ந்திருக்கிறது.. தீண்டாமை ஒழிந்திருக்கிறது.. உடன்கட்டை போயிருக்கிறது.. மனிதனை மனிதனாக மதிக்கும் வழக்கம் வந்திருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவமனைகள்..முதியோர் இல்லங்கள்..சேவை நிலையங்கள்..ஆதரவற்றோர் நிலையங்கள்..வந்திருக்கிறது. விதவைகள் மறுமணங்கள் பெருகியிருக்கிறது.
குறிப்பாய் மேல் ஜாதி வர்க்கத்தின் ஆதிக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது.
காடுகளாய் காணப்பட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் புகைவண்டித் தடங்கள் அமைத்தார்கள்..சாலைகள் அமைத்தார்கள்..கட்டிடங்கள் எழுப்பினார்கள்..கல்வி நிலையங்களைக் கட்டினார்கள்..
அந்த இடங்களைச் சுற்றிப் பிற மனிதர்கள் குடியேற ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ நிறுவனங்கள் அதனாலேயே நகரத்தின் மையப் பகுதியானது.
இன்றைக்கு அதன் மதிப்பு பல்லாயிரம் கோடிக்கணக்கான மதிப்புடையதாய் மாறிப்போனது. அதற்கு யார் என்ன செய்வது?
அய்யோ..அவர்களிடத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறதே என்று புலம்புவதில் லாபம் என்ன?
கிறிஸ்தவர்கள் தங்கள் வருமானத்தில் தசம பாகத்தை வலுக்கட்டாயமாய் ஆலயங்களுக்கென்றும் அதன் நிறுவனங்களுக்கென்றும் கொடுத்துப் பழகிவிட்டார்கள்.
ஆகவே கிறிஸ்தவ நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல.
ஆனால் வெளியிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றவர்கள், ஆ..,இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வெளிநாட்டிலிருந்து வருகிறது என்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அதற்கு யார் என்ன செய்வது?
3 தலைமுறையாய் நாங்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கிறோம்.. நாங்கள்தான் ஆலயங்களுக்குப் பணம் கொடுக்கிறோமே தவிர..ஒரு பைசாகூட இதுவரை எங்கிருந்தும் வந்ததேயில்லை. எங்கள் உணவிற்கு நாங்கள்தான் உழைக்க வேண்டியதிருக்கிறது. அதுதான் உண்மை.
உங்களுக்குச் சந்தேகமாய் இருந்தால், நீங்களும் வந்து பாருங்கள்..யார் வேண்டாம் என்றது?
தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுக்கிற வெளிநாட்டு நிறுவனங்கள் பல இருக்கிறது.
தர்ம காரியம் செய்யப் போகிறோம்..ஏழைகளுக்கு உதவப் போகிறோம்..மருத்துவ உதவிகள் செய்யப் போகிறோம் என்று யார் கேட்டாலும் அவர்கள் உதவி செய்வார்கள்.
கிறிஸ்தவர்கள் என்றில்லை..யார் வேண்டுமானாலும் தொண்டு நிறுவனங்களை ஆரம்பியுங்கள்..பதிவு செய்யுங்கள்..FCRAல் பதிவு செய்யுங்கள்..பெங்களுருவில் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்துவிட்டால் போதும்..அவர்களே உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணமும் பெற்றுத் தந்துவிடுவார்கள்.
பணம் பெற்றுக் கொண்ட பிறகு, நீங்கள் செலவளித்தற்கு முறையான வவுச்சர் கொடுக்க வேண்டும்..அவ்வளவே.
கிறிஸ்தவர்களில் பலருக்கு இது தெரிந்திருக்கிறபடியால் பண ஆசை உடைய மனிதர்கள் இது போல் பல நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்கள்.பணம் பெறுகிறார்கள். அவர்களுக்கும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
உலக கிறிஸ்தவ அமைப்பு, உலகில் உள்ள எல்லா கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் நன்கொடைகளை சில விதிகளுக்குட்பட்டு வழங்குகிறது.
சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காய் பணம் வந்தது.
ஆனால் அதில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஊழல் செய்ததாக புகார் பெறப்பட்டதால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் பலரும் இதுபோல் பணம் பெற்றுக் கொண்டு, அதை நல்ல காரியங்களுக்குப்.  பயன்படுத்தாமல் தன் விருப்பம் போல் செலவு செய்கிற வழக்கம் வந்துவிட்டதால், பல கிறிஸ்தவ நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பதை வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு குறைக்க ஆரம்பித்துவிட்டன.
தவறு செய்கிறவர்கள் எல்லா இடத்திலும் உண்டு.
அதற்காக தவறு செய்கிற ஒரு சிலரை, ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்பட முடியாது.
தவறு செய்யும் நபர் யாராக இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டணை வழங்கலாம்.. ஆனால் அதற்காக அந்த நிறுவனத்தின் பண உதவியையும் பல ஏழை மாணவர்கள் முதியோர் இல்லத்தை  மூடுவது மறைமுகமாக கிறிஸ்தவத்தை அழித்து விடலாம் என அரசு நினைப்பது படைத்த இறைவனுக்கு நீ செய்யும் துரோகம.. பாவம்...  அதற்கு அரசாங்கம் அனாதை குழந்தைகள் முதியோர் ஏழைகளுக்கு கல்வி மருத்துவம் உணவு வசதி செய்து கொடுக்கிறதா.... கேள்வி குறி...
இன்று எத்தனையோ தொண்டு நிறுவனங்களை நம்பியிருந்த ஏழைகள் தெருவில் நிற்கிறார்கள் .. இதை மனசாட்சியுள்ள எந்த மனிதனும் மறுக்க மாட்டான் ... ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறார்.... கிறிஸ்து இறைவன் தன்னையே உலகுக்கு கொடுத்தார்... எனக்குள்ளே வாழ்கிறார் என்ற பெருமை எனக்கு உண்டு....... ஆற்றலை அழிக்க முடியாது ... அது வேறொரு ஆற்றலாக வெளிப்படும்... இது  ஆற்றல் மாறாக் கோட்பாடு... எனவே கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் மார்க்கத்தையும் அழிக்க நினைத்தவன் அழிந்தான்...
கிறிஸ்தவம் இன்னும் வேகமாய் பரவுகிறதே என்று பொறாமையால் பதறுகிறவர்கள்.. முதலில் தங்களிடத்தில் காணப்படுகிற குறைகளைச் சரி செய்து கொள்ளுங்கள்.
சுடுகாட்டில்கூட பிற ஜாதிப் பிணங்களை அனுமதிக்க மறுக்கிற உங்களுக்கு, மற்றவர்களிடத்தில் குறை காணும் தகுதி எப்படி வந்தது?
உயர்ந்தோர்..தாழ்ந்தோர் இல்லை.
மேலோர்..கீழோர் என்று எவரும் இல்லை..
எல்லாரும் என் மக்களே..
எல்லோரும் என் இனமே..
எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு..என்று சொல்லிப் பழகுங்கள்..
அதுவரை இந்த தேசத்திற்கு க்ளாரிந்தாவும், அன்னை தெரசாக்களும் தேவைப்படத்தான் செய்வார்கள்.. அன்னை தெரசாவையே மதவாதி என கூறிய நாடு தானே பாரதம்... ஆனால் அவர்கள் செய்த பணியை எனத பாரதம் மாதாகி ... என ஊழையிடும் நரிகள் ஒரு சதவீதம் செய்ததுண்டா.... 
ஒன்றை உருவாக்கஎவ்வுளவு கடினம் .. அழிக்க மிக எளிது...   நல்ல மனிதன் நல்லதை செய்வான் .. கொடிய மிருக குணமுள்ளவன் கொடுமையே செய்வான்...  ஆனால் நியாய தீர்ப்பு ஒன்று உண்டு .. அன்று அவன் தப்பவே முடியாது....
ஒருவரும் ஒன்றும் செய்வதற்கில்லை..!

ஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும்

*ஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும்*❓❓❓
⛳காலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?
 காலையில் ஜெபிப்பது மிக முக்கியம் ஏனெனில் பிசாசை சந்திப்பதற்கு முன்னதாக,நீங்கள் தேவனை சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் ஜீவியத்தின் சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கு முன்னதாக, தேவனைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.
 நீங்கள் அநேக ஜனங்களோடு பேசுவதற்கு முன்னதாக, தேவனிடம் பேசுகிறவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் மற்ற ஜனங்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்னதாக, தேவனுடன் ஐக்கியம் கொள்பவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் எந்தத் தலைப்புச் செய்திகளைக் கேட்பதற்கு முன்னதாக, பரலோகத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்பவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக அமருவதற்கு முன்னதாக,தேவன் முன் அமருகிறவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் மனிதர்கள் முன் மண்டியிடுவதற்கு முன்னதாக,தேவன் முன் மண்டியிடுகிறவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் ஜனங்களைக் கனப்படுத்துவதற்கு முன்னதாக, தேவனைக் கனப்படுத்துகிறவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் ஜனங்கள் மத்தியில் செல்வதற்கு முன்னதாக,அவரது பிரசன்னத்திற்குள்ளாக செல்கிறவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் உங்கள் சரீரத்திற்கு உணவளிப்பதற்கு முன்னதாக,உங்கள் ஆவிக்கு உணவளிப்பவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் மற்ற சிறிய நாமங்களை அழைப்பதற்கு முன்னதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்று அழைப்பவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் உங்களையே கண்ணாடியில் பார்ப்பதற்கு முன்னதாக, நம்மைப் படைத்தவரைப் பார்ப்பவர்களாக இருப்பீர்கள்.

ஆண்களின் கவனத்திற்கு


ஆண்களின் கவனத்திற்கு

1. மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5.
2. மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.
3. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்.
4. மனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.
5. மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு) எபே.5:25.
6. மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.
7. மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள். கொலெ.3:19.
8. மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே) 1பேதுரு 3:27.
9.மனைவிக்காக ஜெபி. ஆதி.25:21.
10. மனைவியோடு விளையாடு. ஆதி.26:8.
11. மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்). லேவி.18:18.
12. மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திருர. நீதி.5:18.
13. மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே. மல்.2:14.
14. மனைவியை பிரியப்படுத்து. 1கொரி.7:33.
15. மனைவியில் மயங்கியிரு. நீதி.5:19.
16. மனைவியே ஏற்ற துணை (ஜோடி). ஆதி.2: 18

காயீன் ஆபேல்

*ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.*
   *காயீனை உருவாக்குவது எப்படி?*
1.  பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.
2.  கெட்ட வார்த்தைகளைப் பேசும்போது சிரித்து மகிழ்.
3.  ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.
4.  தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.
5.  அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.
6.  அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)
7. பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சண்டை போடு.
8.  பணம் கேட்கும்
போதெல்லாம் கொடு.
9.  அவனுக்கு எதையும் மறுக்காதே.
10. மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.
11. அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.
12. *கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.*
*# *ஆபேலை உருவாக்குவது எப்படி?*#*
1.  கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு
-நீதிமொழிகள் 22:6.
2.  தேவையானபோது தண்டனை கொடு
-நீதிமொழிகள் 22:15.
3.  முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு
-2 தீமோத்தேயு 1:5.
4.  நாள்தோறும் பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடு
-சங்கீதம் 119:9.
5.  ஜெபிக்கக் கற்றுக்கொடு
-மத்தேயு 18:20.
6.  தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு
-புலம்பல் 3:27.
7.  ஆவிக்குரியவை
களுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்
-1 தீமோத்தேயு 4:8.
8.  பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு
- 1 பேதுரு 5:5.
9.  தாய்மையின் மேன்மையை உணர்த்து
-1 தீமோத்தேயு 5:25.
10.  சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு
-எபிரெயர் 10:25.
11.  நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு
-ரோமர் 13:1.
12. நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்
-ரோமர் 12:17.
   *???* *நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? அல்லது ஆபேலா?* ???
ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்ட பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தந்தை,தாயின் கரிசனை, அக்கறை, முயற்சி, ஜெபம்!
இவையே அப்படி உருவாக்கிவிடுகிறது..
It's for Parents. ‍‍‍

வேதம் காட்டிய அறிவியல்..

வேதம் காட்டிய அறிவியல்..
(பின்வரும் பட்டியல் யாரால் தயாரிக்கப்பட்டதென தெரியவில்லை. எனக்கு வந்த இந்தப் பட்டியல் மிக உபயோகமாகக் கருதி அனுப்புகிறேன். கர்த்தருக்கே மகிமை.. சில விளக்கங்கள் தேவைப்படின், ஆங்கில வேதத்தோடு சரிபார்க்கவும்! நன்றி!)
*பைபிள் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:*
*➡அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4.
➡அதிவேக வாகனங்கள் நாகூம்2:4.
➡ரோபோ யோவேல்2:7.
➡மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7.
➡கொள்ளை நோய்  லேவி26;25,உபா28:21,சங்78:50.
➡அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7.
➡பூமியின் வடிவம் உருண்டை  ஏசா40:22.
➡மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும்  ஒபதியா1:4, ஏசா45:18, சங்115:16, ஏசா14:13, ஆமோ9:2.
➡உறுதியான சந்திரன் சங்89:37.
➡காலக்குறிப்புக்காக சந்திரன் சங்104:19.
➡மண்ணிலிருந்து வந்தவன் மனிதன் ஆதி2:7,8,1:27.
➡நிலப்பரப்பைவிட கடல் பெரியது சங்104:25.
➡இசைபாடும் எண்ணற்ற விண்மீன்கள் யோபு38:7 எரே33:22.
➡உலகின் மையப்பகுதி ஆதி28:14,எசே38:10
➡காற்றுக்கு நிறை ஜலத்திற்கு அளவு யோபு28:25.
➡அணுக்களிள் கூட்டமைப்பே அனைத்தும் எபி11:3.
➡குடும்ப கட்டுப்பாடு உபா23:1.
➡மயக்கமருந்து ஆதி2:21.
➡கருக்கலைப்பு(இந்த வசனத்தில் ஊசி வில்லு என தீ.தரிசனமாக குறிப்பிடப்பட்டுள்ளது) ஏசா13:18.
➡உயிர் ரத்தத்தில் உள்ளது லேவி17:11,எபி9:22.
➡JCBஏசா41:15.
➡நிலக்கரி(diamond) யோபு28:5.
➡மோப்ப நாய் எரே51:3.
➡உலகிலேயே ருசியில்லாத பதார்த்தம் யோபு6:6.
➡மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கடல் வற்றிப்போகும் என்ற தீ.தரிசனம் எரே51:36.
➡பூமி 231/2டிகிரி சாய்வாக சுற்றுகிறது யோபு12;15.
➡கடலுக்குள் மலைகள் யோனா2:5,6.
➡விரிவடையும் வானம் யோபு9:8, ஏசா42:5, எரே51:15.
➡சூறாவளி காற்று பிரசங்கி1:6.
➡AC நியா3:20, எரே36:22.
➡பூமியில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக 38Y குரோமோசோம்கள் உள்ளது அப்17:26 (1995ஆம் ஆண்டு Edwin happil என்ற அறிஞர் இதை கண்டுபிடித்தார்).
➡register office ஏசா32:44.
➡ஈய எழுத்துக்கள் யோபு19:24.
➡மகிழ்ச்சி மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது நீதி17:22 (மாற்கு14:34).
➡ஒவ்வொரு உயிர்களுக்கும் மாம்சத்தின் மூலக்கூறு வெவ்வேறு 1கொரி15:39-41.
➡உலக சரித்திரத்தின் ஒரேயொரு நீண்ட நாள் மற்றும் அதன் கணக்கு சரிகட்டப்பட்டது யோசு10:13,14 2இரா20:11.
➡பிற பறவைகள் மிருகங்களின் இயல்புகள் யோபு39. நீதி30:24-28, எரே8.
➡கடைசி காலம் 2தீமோ3ம் அதிகாரம்.
➡அந்தி கிறிஸ்து 2தெச2, வெளி17:11-13.
➡சமாதானமின்மை எரே6:14, 30:5, எசேக்13:10, 1தெச5:3.
➡உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் மற்றும் தண்ணீரை பணத்தைக் கொண்டு வாங்கும் நிலை எசேக்4:17, புல5:4.
கட்டுக்கதைக்கும் பொய்க்கும் செவிசாய்க்கும் காலம் ஏசா30:10, 2தீமோ4:3,4.
➡ஓரிணச்சேர்க்கை ரோமர்1:26-28.
➡சுணாமி லூக்21:25, ஏசா51:15, எரே31:35.
➡பெருவெள்ளமாக மக்களை அடித்து கொண்டு போகும் மழை எசேக்38:22.
➡இரத்தம் அக்கினி புகை அடையாளம்  யோவேல்2:30.
➡பண ஆசை அதிகரிக்கும் 2தீமோ3:2.
➡பரியாசக்காரர்கள் அதிகரிப்பார்கள் 2பேது3:3,4, யூதா8.
➡பாலுறவு குற்றங்கள் வெளி9:21.
➡துர்உபதேசம் 1தீமோ4:1-3.
சூரிய வெப்பம் அதிகரிக்கும் வெளி16:8,9.
➡அணுகுண்டுகளால் எற்படும் நாசங்கள் சக14:12.
➡உலகை இணைக்கும் தொலைதொடர்பு சாதனங்கள் வெளி11:9.
➡கள்ளப்போதகர்கள் 2பேது2:1,2.
➡அதிகரிக்கும்
போர்கள் பஞ்சங்கள் கொள்ளை நோய்கள் பூமி அதிர்ச்சிகள் மத்24:6-8.
➡வானத்தில் பற்பல அடையாளங்கள் லூக்21:11.
➡உலகளாவிய போர்கள் யோவேல்3:9, மத்24:7, வெளி16:14.
➡ஆனாலும் பொய்யான சமாதானம் எரே6:14, எசேக்13:10, 1தெச5:3.
➡பலர் தங்களை கடவுளின் அவதாரம் என்பார்கள் மத்24:5, லூக்21:8. இன்னும் பல உள்ளது சகோதரர்களே.
வேதாகமம் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல.. ஆனால், அது அறிவியலின் அடித்தளம். இன்றுவரை நிறைவேறும் தீர்க்கதரிசன நூல்! கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படச்சொல்லும் ஆசிரியர்! உலகமே அழிந்தாலும் வேதவார்த்தை அழியாது. நாமும் அழியாது, பெருவாழ்வு வாழ, வேதவார்த்தைக்கே கீழ்ப்படிதல் அவசியம்! ஆமென்!

Greatest Physician

The Greatest Physician*

_________________________
Exodus 15: 26 - *I am the Lord who heals you*
Genesis 2:22 - *Surgeon*
Genesis 2:21- *Anesthetist*
Genesis 2:21- *Plastic Surgeon*
Matthew 20:34 - *Ophthalmologist*
Matthew 15:30 - *Orthopaedic*
Mark 7:32-35 - *ENT Specialist*
Zechariah 9:7 - *Dentist*
Matthew 9:6 - *Neurologist*
Ezekiel 36:26 -  *Cardiologist*
Matthew 8:3  - *Dermatologist*
Luke 14:2-4  *Nephrologist*
I Corinthians 12:9 - *Urologisit*
Mark 10:14 - *Pediatrician*
Psalms 113:9 - *Gynecologist*
Luke 8:33 - *Psychiatrist*
2 King 20: 1-7 - *Oncologist*
Psalms 103:34 *Physician*
Acts. 9:20 *Life Changing Specialist*
John 10:10  *Life Saving Specialist* 
whatsapp...