Saturday, January 27, 2018

*ஜெபிக்கிறவர்களுக்கான தகவல்கள்.*

1⃣  *உலகளவில் செயல்பட்டு வரும் மிஷனரி ஸ்தாபனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளன்.*

2⃣ *உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25% பேர் இந்தியாவில் உள்ளனர்*

3⃣ *இந்தியாவில் இயேசுவை அறியாத 3.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இங்கு 40 கோடி பேருக்கு இயேசு அறிவிக்கப்படவில்லை.*

4⃣ *இந்தியாவில் 30,000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட 204 இன மக்கள் உள்ளனர். 2600 இன மக்களிடையே ஒரு சபை கூட இல்லை.*

5⃣ *இந்தியாவில் 1 இலட்சத்திற்கும் மேல்  முழு நேர ஊழியர்கள் உள்ளனர்.*

6⃣ *இந்தியாவிலுள்ள வட கிழக்கு மாநிலங்களான மிசோராம், நாகலாந்து, மேகாலாயா, ஆகிய மாநிலங்களில் 95 % பேர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.*

7⃣ *இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் இரகசிய கிறிஸ்தவர்களாக உள்ளனர்.*

8⃣ *இந்தியாவிலுள்ள 28 ஆயிரம் பின்கோடுகளில்  சுமார்  18 ஆயிரம் பின் கோடுகளில் ஒரு கிறிஸ்தவ ஊழியர் கூட இல்லை.*

9⃣ *இந்தியாவில் கிறிஸ்தவர்களின் உழைப்பும், பணமும் 90% கிறிஸ்தவர்களிடையே நடைபெறும் ஊழியங்களுக்காக செலவிடப்படுகிறது.*

🔟 *இந்தியாவில் மனிதர்களை கொன்று சாப்பிடும் சில பழங்குடி ஆதிவாசிகளுக்கு சுவிஷேசம் அறிவிக்கப்பட்டதால் அநேகர் மனம் மாறியுள்ளனர்.*

1⃣1⃣ *இந்தியாவில் வட பீகார் மிக குறைந்தளவு சுவிஷேசம் அறிவிக்கப்பட்ட மிக அதிகமான மக்கள் தொகை உள்ள பகுதியாகும்.*

1⃣2⃣ *இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை மதவாத இயக்கங்கள் தடை செய்து வருகின்றன.*

1⃣3⃣ *ஜெபமே தியானத்தின் பிறப்பிடமாகவும், வாய்க்காலாகவும் இருக்கிறது. ஜெபத்தில் உண்மையுடனும், ஆயத்ததுடனும் காத்திருக்க வேண்டும்.*

1⃣4⃣ *வேறு எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்னால் குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவனோடு தனித்திருப்பது சிறந்தது.*

*ஜெபிப்போம், தேவனுக்காக செயல்படுவோமாக!!*

Tuesday, January 23, 2018

*உங்களுக்குத் தெரியுமா???*

* இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.

1. மெல்கொயர் – பரிசு பொன்.

2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.

3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..

1. திஸ்மாஸ்

2. கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.

* வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது .

1. மண்ணிலிருந்து ஆதாம்.

2. எலும்பிலிருந்து ஏவாள்.

3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.

4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.

* மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அந்நூலின் ஆசிரியரான மாற்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.

* சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.

* சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரத்தை குறித்து மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.

* வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23

* கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர். ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.

* நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

* இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மிக பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.

* தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

* யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

* “தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.

* தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “What hath God wrought?” Num 23:23 அதாவது “தேவன் என்னென்ன செய்தார்?” எண் 23:23.

* மோசே குழந்தையாக  இடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

* ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

* ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

* யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது

1. யோசு 4:7,19.

2. 2 இரா 2:8.

3. 2 இரா 2:13,14.

* வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

* தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்

1. மோசே – யாத் 35:28-30

2. இயேசு – மத் 17:2

3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

* வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.

1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.

2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.

3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

* “அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது :-

மாற் 14:36,

ரோம 8:15;

கலா 4:6.

* லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது.

லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.

* லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது.

லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.

* யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.

* ‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது

1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.

2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.

3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.

4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்

1. எலியா – 1 இராஜ 18:37,38.

2. தாவீது – 1 நாளா 21:25,26.

3. சாலொமோன் – 2 நாளா 7:1.

* “ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

* சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது

சங் 15,70,93,100,125.

* யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

* இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –

லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.

3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.

a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

* தமிழ் புதிய ஏற்பாடு கி.பி 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

* ஹென்றி பாவர் என்பவர் தலைமையில் முழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவழுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.

* வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

* வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).

* கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமும் இதுவே).

* நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

* சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.

* தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

* சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

* புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

* “சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

* 2இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

* பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1.

Friday, January 19, 2018

CAN A CHRISTIAN DRINK ALCOHOL???

When a European Airline was initially launched, an educated Christian gentleman was traveling in the first class section.
An air hostess approached him with a complimentary drink, this was an alcoholic drink, but the man politely refused.
The air hostess returned but this time brought the drink on a platter, designed to appeal and impress. However, the Christian man again politely refused, explaining he doesn't drink alcohol.
The air hostess was concerned and informed the manager. The manager approached the man with another platter, now designed with flowers. He questioned, “Is there something wrong with our service? Please enjoy the drink, it is a complimentary offer.”
The man replied, “I am a Christian and I do not drink alcohol? The manager still insisted that the man take the drink. Then, the Christian proposed that the manager should give the drink to the pilot first. The manager stated, “How can the pilot drink alcohol, he’s on duty! And if he drinks there are all chances for the plane to crash”.
The Christian passenger with tears in his eyes, replied, “I am a Christian and I am ALWAYS on duty in order to protect my FAITH and if I Drink Alcohol I will crash my whole life here and hereafter. I AM 100% ON DUTY!"
Maybe yours might not be an alcohol, it may be tempting you for *sex* as it was done to *Joseph*, battling with how to control your *anger*, profane and vain *babblings*, your *dressing* , your *attitude* towards people and finally not sharing the *Word*.
Do you know that souls are dying because of those reckless behaviours of ours?
*WE ARE 100% ON DUTY*

True and Moving Story

A sobbing little girl stood near a small church from which she had been turned away because it was too crowded. "I can't go to Sunday School?" she sobbed to the pastor as he walked by. Seeing her shabby, unkempt appearance, the pastor guessed the reason and, taking her by the hand, took her inside and found a place for her in the Sunday school class. The child was so touched that she went to bed that night thinking of the children who have no place to worship Jesus.

Some two years later, this child lay dead in one of the poor tenement buildings and the parents called for the kind hearted pastor, who had befriended their daughter, to handle the final arrangements.

As her poor little body was being moved, a worn and crumpled purse was found which seemed to have been rummaged from some trash dump. Inside was found 57 cents and a note scribbled in childish handwriting which read, "This is to help build the little church bigger so more children can go to Sunday school."

For two years she had saved for this offering of love. When the pastor tearfully read that note, he knew instantly what he would do. Carrying this note and the cracked, red pocketbook to the pulpit, he told the story of her unselfish love and devotion. He challenged his deacons to get busy and raise enough money for the larger building.

But the story does not end there! A newspaper learned of the story and published it. It was read by a Realtor who offered them a parcel of land worth many thousands. When told that the church could not pay so much, he offered it for 57 cents. Church members made large donations. Cheques came from far and wide.

Within five years the little girl's gift had increased to $250,000.00--a huge sum for that time (near the turn of the century). Her unselfish love had paid large dividends.

When you are in the city of Philadelphia, look up Temple Baptist Church, with a seating capacity of 3,300 and Temple University, where hundreds of students are trained. Have a look, too, at the Good Samaritan Hospital and at a Sunday School building which houses hundreds of Sunday school children, so that no child in the area will ever need to be left outside during Sunday school time. In one of the rooms of this building may be seen the picture of the sweet face of the little girl whose 57 cents, so sacrificially saved, made such remarkable history. Alongside of it is a portrait of her kind pastor, Dr. Russell H. Conwell, author of the book, Acres of Diamonds.

A true story, which goes to show WHAT GOD, CAN DO with 57 cents. Please forward this to those friends who would receive a blessing from reading this true story.
🙏🏼

Wednesday, January 17, 2018

நம்மோடு இருக்கிறார்

அன்று அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்....

Tuesday, January 16, 2018

What’s the size of God?????????

A boy asked the father:  *What’s the size of God*?

Then the father looked up to the sky and seeing an airplane asked the son:
What’s the size of that airplane?
The boy answered: It’s very small. I can barely see it.
So the father took him to the airport and as they approached
an airplane he asked:
And now, what is the size of this one?
The boy answered: Wow daddy, this is huge!
Then the father told him: *Like this is God, His size depends*
*on how distant you are from Him.*
*The closer you are to Him, the greater He will be in your life!*

Sunday, January 14, 2018

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்:

இத் தகவல் Oxford பல்கலைக்கழகம் மாணவர் அராய்ச்சியில் வெளியிட்டுள்ள தகவல்,..
------------------------------------------
இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின்
எடை-150 கிலோ
நீளம்-15 அடி
அகலம்-8 அடி"
------------------------------------------
சரீரத்தில் அறையப்பட்ட 🔩🔨ஆணியின் நீளம்-8 அங்குலம்
அகலம்-3/4 அங்குலம்
------------------------------------------
இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-
5⃣அடி 1⃣1⃣அங்குலம்
அவருடைய எடை: 8⃣5⃣ கிலோ
------------------------------------------
இயேசுவின் பாடுகளை பற்றி:
"இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3⃣ முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்"
=====================
1⃣7⃣மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்
------------------------------------------
அவர் சரீரத்தில் மொத்தம் 5⃣4⃣8⃣0⃣ காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன
=====================
அவருடைய முதுகில் ஏறத்தாழ 1⃣5⃣0⃣ ஆழமான காயங்கள் இருந்தன
------------------------------------------
அவருடைய தலையை கிளித்து 1⃣7⃣ முட்கள் உள்ளே சென்றன
=====================
அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது
------------------------------------------
இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 3⃣5⃣0⃣ சேவகர்களும், 5⃣0⃣ குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்
=====================
யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 7⃣8⃣5⃣ நிசான்1⃣5⃣ அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி
கிபி 3⃣0⃣ ஆம் ஆண்டு ஏப்ரல்7⃣ஆம் தேதியிலே மரித்தார்
------------------------------------------
➕சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதின் அர்த்தம்;
.
I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின் பொருள்: "நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா👑
=====================
மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்
----------------------------------------

Saturday, January 13, 2018

Your love to God

On a very cold day, a little boy was standing outside a shoe store, barefooted.. He was shivering with cold and was looking through window at the shoes.
A rich lady came out of that store. While waiting for ride she saw that little boy. She approached him and said, “Kid, Why are you looking so earnestly in that window??”
Little boy replied, “I don’t have any shoes.. I was asking God to give me a pair of shoes..”
After listening this lady took that boy inside shoe store and asked clerk if she can get a bowl of water and towel. Clerk brought that in few minutes and then she took that boy at the back of store.
She removed her gloves and knelt down, cleaned and dried little boys hands and feet then she bought him back in to shoe store and asked clerk to bring pair of socks and shoes.
Clerk bought socks and shoes and gave them to her. She took those and again knelt down. Placing pair of socks upon the boy’s feet, she gave him a pair of shoes to wear. She bought some more pair of socks and gave them to him and patted him on head saying, “Kid, do you feel more comfortable now??”
As she was leaving, little kid caught her by hand and looked up to her with tears in his eyes and replied, “Are you God’s angel ??”

Moral lesson: Let God used you to help others especially to those who are in need because your love to God will be seen in your life by helping others.

விசுவாசிக்கிறவனுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) எல்லாம் கூடும் - மாற் 9-23

2) விரும்புகிறது கிடைக்கும் - மத் 15-28

3) உலகத்தை ஜெயிப்பான் - 1 யோ 5-4

4) நீதிமான் பிழைப்பான் - எபி 10-38

5) பாக்கியவான் - யோ 20-29

6) பாக்கியவதி - லூக் 1-45

7) தைரியம் - எபேசி 3-12

8) தேவனிடத்தில் சேருகிறான் - எபேசி 3-12

9) விசுவாசிக்கிறவன் பதற மாட்டான் - ஏசா 28-16

10) விசுவாசத்தினால் பெலன் - எபி 11-11

11) தாகம் (உலக ஆசை) ஏற்படாது - யோ 6-35

12) இருதயம் சுத்தம் ஆகும் - அப்போ 15-9

13) நிற்கிறோம் (ஆவிக்குரிய வாழ்க்கையில்) - ரோ 11-20

14) நடக்கிறோம் - 2 கொரி 5-6

15) அவன் உள்ளத்தில் இருந்து ஜிவ தண்ணீர் உள்ள நதிகள் ஒடும் - யோ 7-38

16) வெட்கபடமாட்டான் - 1 பேதுரு 2-6

17) தேவ மகிமையை காண்போம் - யோ 11-40

18) நீதிமான் ஆக்கபடுகிறோம் - ரோ 3-28

19) இரட்சிப்பு - மத் 9-22

20) தேவனுடைய புத்திரர் ஆகிறோம் - கலா 3-26

21) பாவ மன்னிப்பை பெறுவோம் - அப் 10-43

22) வீட்டார் அனைவரும் இரட்சிக்க படுவிர்கள் - அப்போ 16-31

23) நம்பிக்கை - கலா 5-5

24) மரணம் கிடையாது - யோ 5-24

25) கிறிஸ்து இருதயங்களில் வாசம் பண்ணுவார் - எபேசி 3-17

26) சந்தோஷம் & சமாதானம் - ரோ 15-13

27) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் - யாக் 5-15

28) நித்திய ஜீவன் கிடைக்கும் - யோ 3-16

பயப்படக்கூடாது - எதற்கு

1) பாடுகளை கண்டு - வெளி 2-10

2) சத்துருக்களை கண்டு - உபா 20:3

3) ஜசுவரியவானை கண்டு - சங் 49:16

4) துர்செய்தியை கேட்டு - சங் 112:7

5) ஆபத்துக்கு - 1 பேது 3:6

6) மனுஷனின் நிந்தனைக்கு - ஏசா 51:7

7) பொல்லாப்புக்கு - சங் 23:4

8) சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு - மத் 10:28

9) பார்வோனுக்கு (பிசாசுக்கு) - உபா 7:19

10) மனிதனின் முகத்திற்கு - உபா 1:17

11) பொய் தீர்க்கதரிசிக்கு - உபா 18:22

12) இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கு - சங் 91:5,6

13) கொள்ளை நோயை கண்டு - சங் 91:5,6

Friday, January 12, 2018

Miracle

ஒரு_8_வயதுள்ள_சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்....

கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அங்கிள்... அங்கிள்....
என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....
அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்....
திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள்
prescription கொண்டுவந்தாயா குழந்தை????
அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா????
எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.
"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள்.
இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.
சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????
குழந்தை மென்று விழுங்கி சொன்னது #மெரிக்கள்.
கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.
நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????
குழந்தை சற்றும் யோசிக்காமல் மீண்டும் சொன்னது #மெரிக்கள் அங்கிள்...
அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????

குழந்தை கண்ணீருடன் சொன்னது....

டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்...
குழந்தை அழுகை ஆரம்பித்தது.
அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.

அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.
வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார்.
அக் குழந்தைக்கு #இருதயத்தில்_5_இடங்களில்_block இருப்பதாகவும்,
அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....
டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா????
மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற
அதற்க்கு மருத்துவர்
இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது #MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த #miracle என்ற வார்த்தையை
மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்.

எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார் என்றார்!

பிரதிபலன் பாராது உதவுவோம்.


படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.