Wednesday, January 3, 2018

Faith grows more as You grow more in Christ

*இயற்கையான விசுவாசம்*

*"அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ண முள்ளவனாய் எண்ண வேண்டும்" (ரோம. 12:3).*

எப்படி ஒரு மனுஷன் கண்களோடும், காதுகளோடும் பிறந்திருக்கிறானோ, அதுபோல ஓரளவு விசுவாசத்தோடும், பிறந்திருக்கிறான். விசுவாசம் இல்லாவிட்டால், உலகம் இயங்காது. இந்த விசுவாசத்திலே வாழுகிறவர்கள், தன்னம்பிக்கை உடையவர்களாயிருக்கிறார்கள். தங்களை அறியாமலேயே ஒரு இறைவன் உண்டு, அவர் நல்லவர். தங்களுக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கிறவர், என்று நம்புகிறார்கள்.

கர்த்தர், ஒவ்வொருவருக்கும், ஓரளவு விசுவாசத்தைக் கொடுத்திருக்கிறார் (ரோமர் 1:8). காலையில் எழுந்ததும், முகம் கழுவ குழாய்களைத் திறக்கிறோம். தண்ணீர் குழாயிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம். முகச்சவரம் செய்கிறவன், அவன் கழுத்தை வெட்டமாட்டான் என்று விசுவாசிக்கிறோம். பஸ்சில் ஏறும்போது, அந்த டிரைவர் ஒழுங்காக பஸ்ஸைக் கொண்டு போய் சேர்ப்பார், என்ற நம்பிக்கை உடையவர்களாயிருக்கிறோம்.

குடும்ப வாழ்க்கையில், கணவன் மனைவி ஒருவரையொருவர் நம்ப வேண்டும். விசுவாசத்தின் அடிப்படையில்தான், குடும்ப வாழ்க்கை சிறப்பாயிருக்கும்.

ஒரு கட்டிட வேலையை, அல்லது சமையலைத் துவங்க வேண்டுமென்றால், அதற்கு தேவையான பொருட்களெல்லாம் அவசியம். அதுபோல, உங்களுக்குள்ளே விசுவாசமிருந்தால், உங்களுடைய விசுவாசத்தை, கர்த்தராகிய இயேசு துவக்க முடியும். ஆகவே, அப். பவுல், *"விசுவாசத்தைத் துவக்குகிறவரும், பூரணப் படுத்துகிறவருமாகிய, இயேசுகிறிஸ்துவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே, பொறுமையோடே ஓடக்கடவோம்" என்று எழுதுகிறார் (எபி. 12:1).* அவர்தான், உங்களுக்குள்ளே விசுவாசத்தை ஆரம்பித்து வைக்கிறவர்.

ஒரு குழந்தை பிறக்கிறது. இரண்டு மூன்று வயதானவுடன், அது தன் தாய் சொல்லுவதையெல்லாம் நம்புகிறது. தகப்பனை ஏற்றுக்கொள்ளுகிறது. நீங்கள் எதை சொல்லிக்கொடுத்தாலும், அந்த குழந்தை கேள்விக் கேட்காமல், அதை ஏற்றுக் கொள்ளுகிறது. பள்ளிக்கூடத்திலே சேர்க்கும் போது, ஆசிரியர்கள் எதை சொல்லிக் கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறது. வளர வளர ‘எதை நம்பலாம்? எதை ஏற்றுக்கொள்ளக் கூடாது,’ என்று பகுத்துணர்கிறது.

ஒரு டாக்டர், உங்களுடைய கொடிய நோயை குணமாக்கி விட்டாரென்று வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக அவர்மேல் உங்களுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது. இரண்டாம்முறை மற்ற டாக்டர்களால் கைவிடப்பட்ட ஒருவரை, கூட்டிக் கொண்டுச் செல்லுகிறீர்கள். அவரையும் இந்த டாக்டர் குணமாக்கிவிட்டாரென்றால், உங்கள் விசுவாசம், அவர்மேல் பல மடங்கு வளர்ந்துவிடும்.

பெரும்பாடுள்ள ஸ்திரீ, இயேசுவிடத்திலே வந்தாள். அவளுக்குள் ஒரு விசுவாசம் வந்தது. இத்தனை பேரை குணமாக்கின இயேசு, என்னையும் குணமாக்குவார் என்று விசுவாசித்து, யாரும் அறியாமல் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இந்த விசுவாசத்தினாலே, அவளுக்கிருந்த பெரும்பாடு நீங்கி, சொஸ்தமானாள். கர்த்தரோடு பழகப் பழக உங்களுக்குள் அதிகமாக விசுவாசம் பெருகும்.

*நினைவிற்கு:- "ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும்;கேள்வி, தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17).*

*NATURAL FAITH!*

*"For I say, through the grace given to me, to everyone who is among you, not to think of himself more highly than he ought to think, but to think soberly, as God has dealt to each one a measure of faith” (Romans 12:3).*

Similar to how a man is born with organs like eyes and ears, he is also born with a certain level of faith. The world will not function if there is no faith. Those who live with this faith, do possess self-confidence too. They unknowingly believe that there is a God, He is good and He will perform everything for them.

*God has given faith to everyone to a certain level (Romans 1:8).* After waking up in the morning, we open the tap for washing the face with the expectation that water will come out of it. We allow the barber to shave our face with the hope that he will not chop our neck off. While boarding a bus we hope that the driver will take us to the destination safely.

The husband and wife should believe each other in the family life. Only on the basis of belief, the family life could flourish. When a construction work or a cooking is to be commenced, it is essential to possess all the required materials. Similar to this, only if you have a certain faith in you, Lord Jesus could develop it. So, Paul wrote, “. *....let us run with endurance the race that is set before us, looking unto Jesus, the author and finisher of our faith” (Hebrews 12:1, 2).* He is the author of the faith within you.

A child is born. When it completes two or three years it believes all the things what the mother says and accepts the father too. The child accepts whatever is taught by the parents without questioning. After this stage, when the child is put to school it accepts all things taught by the teachers. As it grows further, it begins to discern what to believe and what to accept.

When a doctor cures a deadly disease in you, immediately you trust him. Later, you may take a patient who has been abandoned by other physicians and if the doctor cures his ailment your faith in him will increase multiple times.

A woman who had a discharge of blood for twelve years came to Jesus and she had the faith within her, she believed that Jesus who has healed so many sick will heal her also and with this faith she touched the hem of His garment. This faith made her well. As you keep moving with Jesus, your faith will grow.     

*To meditate: “So then faith comes by hearing, and hearing by the word of God.” (Romans 10:17).*

0 comments: