Friday, July 3, 2015


உபவாசம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன


உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும். மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.
மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும் உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும் தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள் “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவிதமான உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


1.சாதாரணமானது:-இவ்வகையின்போது ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு உணவு எடுப்பதில்லை, அதாவது நீர்வகையான உணவுவகைகளும் அருந்துவதில்லை.
2.பகுதிநேரமானது:-இவ்வகையின்போது உணவானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் சிலவகையான உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.முற்றுமுழுதானது:- இவ்வகையின்போது , உடலுக்குள் எந்தவகையிலும் அதாவது நீராகரமோ அன்றி உணவுவகைளோ உட்கொள்வதில்லை.


ழைய ஏற்பாட்டுக்காலத்தில், உபவாசம் என்பது ஒருவர் தனது உணவை ஒதுக்கிவெறுத்து கடவுளின் கோபத்தைக் குறைப்பதற்கும், தனக்கு பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கும் செய்யும் செயற்பாடாகும். மிகவும் அவசரநேரங்களில், ஜனங்கள் உபவாசித்து தங்களைப் பிரச்சனைகளிலிருந்து காக்கும்படி கர்த்தரை வேண்டிக் கொள்ளுதலாகும்.(நியாயாதிபதிகள். 20:26, 1 சாமு.7:6, 1ராஜா. 21:9, 2நாளா.20:3, எரேமியா 36: 6,9). தனியாக மக்கள் உபவாசிப்பது தங்களை கர்த்தர் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் வண்ணமாக.(2 சாமு. 12: 16-20, 1ராஜா. 21: 27, சங்கீ. 35:13, 6910) உபவாசத்தின் ஒரு பகுதியாக ஜெபம் செய்தல்வேண்டும்.( எஸ்றா. 8:21,நெகேமியா 14: 12)
கிரமமான உபவாசம் காலையிலிருந்து மாலைவரை நீடிக்கின்றது, இரவில் உணவு உடகொள்ளப்படுகின்றது.(நியா.20: 26, 1சாமு. 1:12). ஆனால் மொர்தகாய் அழைத்த்து போல் நீண்ட மூன்று நாட்களுக்கான ( இரவும்பகலும் உணவு உட்கொள்ளாதிருத்தல் எஸ்தர். 4:16), சவுலின் மரணத்தின்போது ஏழு நாட்கள் உபவாசம் ( 1.சாமு. 31:13, 2. சாமு.3:35) விஷேசித்த உபவாசம் சீனாய் மலையில்மேசேயினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40 நாள் உபவாசம்.( யாத்.34: 28) தானியேல் தரிசனம்பெற்றுக் கொள்வதற்கு முன்பாக மூன்று வாரங்கள் உபவாசம்ஃமேற்கொண்டார்.( தானி. 9:3, 10:3, 12)
உபவாசம் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தவறாகப்பயன்படுத்தப்பட்டது. இது வஞ்சகமாக பகட்டுக்காக மேற்கொள்ளப்பட்டது, கர்த்தருக்காக மேற்கொள்ளப்படவில்லை, தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், கடவுள்பயம் உள்ளவர்கள் என்றும்வெளியில் காண்பிப்பதற்காக உபவாசித்தார்கள். திர்க்கதரிசிகள் இவ்வகையான உபவாசங்களுக்கு எதிராக புலம்பினார்கள், எரேமியா புத்தகத்தில் உள்ளதுபோல். அதில் கர்த்தர் சொல்லுகிறார்,” அவர்கள் உபவாசித்தாலும் அவர்களின் அழுகையைக்கேட்க மாட்டேன்” (எரேமியா. 14: 12, ஏசா. 58: 1-10)

புதிய ஏற்பாட்டுக்காலத்திற்கும் பழைய ஏற்பாட்டுக்காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் உபவாசம் செய்வதில் புதிய வகையான வழக்கம் ஏற்பட்டது. ஜனங்கள் பொருத்தனைகளை உபவாசிப்பதன் மூலம் நிறைவேற்றினார்கள். செய்த தவறுக்கு மனமிரங்குதல்,குற்றத்திற்கு மன்னிப்புகேட்டல் என்பன உபவாசத்தின் போது இணைந்துவந்தன, அத்துடன் ஜெபம்செய்தல் மிகவும் உறுதுணையாக இருந்த்து. விஷேசித்த உபவாச ஜெபத்தைச் செய்து பாவமன்னிப்பு கேட்டார்கள். அனேக போதகர்களின்  அபிப்பிராயத்தின்படி உபவாசம் என்பது அனேகரின் ஆரம்ப தெய்யபயத்தை வெளிக்காட்டுகின்றது. அனேகர் உபவாசத்தின் போது தங்கள் முகத்தை துக்கமாக வைத்திருந்து தங்கள் இருளை அகற்ற வழிதேடினார்கள்.
யேசுக்கிறிஸ்து வித்தியாசமாக உபவாசத்தை வெளிப்படுத்தினார். பிசாசினால் சோதிக்கப்பட்ட போது உபவாசித்தார்.( மத். 4: 2, லூக் 4:2) அத்துடன் மலைப்பிரசங்கத்தில் உபவாசத்தைப்பற்றிப்
போதித்தார்.(மத்.6: 16-18)   இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் யேசுகூறிய வார்த்தைகளைக் கொண்டு உபவாசம் பற்றிய அவரது கருத்துக்களைப் புரிந்துபொள்ள முடியும்.
யேசுக்கிறிஸ்துவின் பிசாசின்சோதனை மிகவும் முக்கியபோராட்டத்தின் மத்தியில் இடம்பெற்றது.அவர் பிசாசின்சோதனைக்கு முகம் கொடுக்கும்வண்ணம் ஆவியானவரினால் வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டார்.அவர் முற்றுமுழுவதாக கர்த்தரிலே தங்கியிருந்தபடியால், உபவாசித்து ஜெபம்பண்ணினார்.
யேசுவாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதகர்மார்களின் கருத்துக்களைவிட யேசுவின் மலைப் பிரசங்கத்தில் உபவாசம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் வித்தியாசமானவையாகும்.மக்களுக்கு காண்பிக்கக் கூடிய வகையான உபவாசத்தை யேசு கண்டிக்கிறார். அவர் இதற்கு புதியபெயரைக் கொடுக்கிறார். உபவாசம் என்பது கர்த்தருக்கு ஊழியம்செய்தலாகும். இந்த புதிய கருத்னதானது யேசுவின் நம்பிக்கையும் இரட்சிப்பும் என்ற பிரசங்கத்தின் ஒருபகுதியாகும்.. மணவாளனாகிய யேசு இங்கு இருக்கிறார், இது மகிழ்ச்சியின் காலமாகும், இது துக்கத்தின் காலமல்ல. மேசியாவாகிய இரட்சகரின் வருகையானது கெட்ட காலத்தின் வல்லமையை உடைத்தெறிந்துள்ளது. இதன் கருத்தானது உபவாசம் என்பது  கிறிஸ்து  ​ கொண்டுவரப்பட்ட சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முரண்பாடுள்ளதாய் இருக்கிறது, ஆனால் கிறிஸ்த்துவின் ராஜ்யமானது இன்னமும் உலகில் பூரணமாக வராதபடியால், இன்னமும் உபவாசம் பண்ணவேண்டிய தேவையுள்ளது. இது ஜெபத்தின் ஒரு பகுதியாகும், கர்த்தருக்கு முன்பாக நாம் மிகவும் அமைதியாக ஜெபம்செய்தல் வேண்டும்.

உபவாசம்:- அவிக்குரிய ஒழுக்கத்தில் உபவாசம் எவ்வாறு உபயோகப்படுகிறது.?
2.நாளாகமம்:-20: 3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு அவர்களுக்காக யுத்தம்செய்து வெற்றியைக் கொடுத்தார். ஆபத்துக்கள் நேரிடும் சமயங்களில் கர்த்தருடைய பாத்த்தில் உபவாசத்துடன் காத்திருந்து ஜெபம் செய்யும் போது கர்த்தர் எங்களை இரட்சிக்கப் போதுமானவராக இருக்கிறார்.
உபவாசம் மனம்திரும்புதலின் ஒரு பகுதியாகும்.:-தேசம் அழிவைநோக்கிக் கொண்டிருக்கும் போது,யோசபாத் தனது மக்களை கர்த்தரின் பாதத்தில் உபவாசத்துடன் காத்திருக்கும் படிவேண்டிக் கொண்டான். தங்களுடைய நாளாந்த வேலைகளை எல்லாம்செய்யாமல் கர்த்தரு டைய பாத்த்தில் காத்திருந்து தங்கள் பாவங்களுக்காக மனம்வருந்தி  உதவிக்காக மன்றா டினார்கள். விஷேடதேவையுள்ள காலங்களில் உபவாசத்துடன் கர்த்தரைத்தேடுதல் மிகவும் பயனுடையதாகவிருக்கும்..
எஸ்றா. 8:21.அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் , நான் அங்கே அகாவா நதியண்டையில் உபவாசத்தைக்  கூறினேன்.
உபசாசம் ஒரு ஜெபமாகவிருக்கமுடியும்:-கர்த்தருடைய வாக்குறுதிகள் மக்களைப்  பாதுகாக்கும் என்று எஸ்றா அறிந்திருந்தான்,ஆனால் அவற்றை அவன் பெற்றுக் கொள்ள வில்லை. ஜெபத்தின்மூலம் உரிய ஆசீர்வாங்கள் கிடைக்கும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். அதனால் எஸ்றாவும் மக்களும் உபவாசித்து தங்களைத் தாழ்த்திக் கொண்டார்கள். அத்துடன் அவர்களுடைய ஜெபத்திற்கு நல்ல பதிலும் கிடைத்தது.உபவாசத்தின்மூலம் உணவை ஒதுக்கி தங்களைத் தாழ்துவது தாங்கள் உண்மையிலேயே கர்த்தரிலேயே தங்கியுள்ளோம் என்பதை வெளிப்படுத்தலாகும்.உபவாசிப்பதன்மூல்ம் கத்த்தரைத் தியானிப்பதற்கும் துதிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகம் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனேகமாக நாம் மேலெழுந்தவாறாக ஜெபம் செய்கிறோம். ஊக்கமான ஜெபம், மாறாக, அதிக கவனத்துடன் ஜெபித்தல் வேண்டும்.இவ்வாறான ஜெபம் கர்த்தருடைய விருப்பத்தைத் தொட்டு வருகிறது, அத்துடன் எங்களில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது.ஊக்கமான ஜெபம் இல்லாதவிடத்து, கர்த்தருடைய  விரைவான செயற்பாடுகளை செயற்படுதவிடாமல் தாமதம்செய்கிறோம்.
மத்.6:17-18.:- நீயோ உபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மணுஷருக்குக்  காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே  காணும்படியாக, உன் தலைக்கு  எண்ணெய்பூசி, உன் முகத்தைக கழுவு. அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன்பிதா, உனக்கு வெளியரங்கமாய்ப் பதிலளிப்பார்.

சரியான தேவைக்காகவே உபவாசம் செய்தல் வேண்டும்.:- உணவின்றி உபவாசம்செய்தல் அதிகநேரம் ஜெபத்தில் இருப்பதற்காகச் செய்யப்படுகிறது. இது மிகவும் சிறப்பானதும் கஸ்டமானதுமாகும். இதன்மூலம் அதிகநேரம் ஜெபம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியும், அதிக உணவின்றி ஜீவிக்கமுடியும் என்பதை ஞாபகப்படுத்தும், அத்துடன் கர்த்தருடைய வரங்களைப் பயன்படுத்த முடியும்.யேசு உபவாசத்தை பிழையானது என்று கூறவில்லை, ஆனால் மற்றவர்கள் அறியும்படியான போலித்தனமானதை வெறுத்தார். வருடத்திற்கு ஒருமுறை யூதர்கள் கட்டாயம் பாவநிவர்த்திசெய்யும் நாளில் உபவாசித்தல் வேண்டும்.(லேவி. 23: 32) பரிசேயர் இருவாரங்களுக்கு ஒருமுறை உபவாசித்து தங்கள் பரிசுத்த்த்தை காண்பிப்பார்கள், சுயநீதிக்காகச் செய்யும் செயற்பாடுகளை யேசு கண்டித்தார். சுய நீதிக்காகவோ அல்லது புகழுக்காகவோ உபவாசம் செய்யாமல், ஆவிக்குரிய ஒழுக்கத்திற்காகவும், முக்கிய தேவைகளுக்காகவும் உபவாசித்து ஜெபிப்பதை அவர் விரும்பினார்.

உபவாசத்திற்கான வேத வார்த்தைகள்.
உபவாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை:-2 நாளா.20:3. :-20: 3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.
உபவாசிப்தனால்  நாம் கர்த்தரிடம் அதிகமாக கிட்டிச்சேருவோம், அதனால் அவருடைய வழிநடத்தலைப்பெற்றுக் கொள்ளுவோம்.
யோவேல்.1:14. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விஷேசித்த ஆசரிப்பைக்கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும்  உங்கள் தேவனாகிய  கர்த்தரின் ஆலயத்திலே  கூடிவரச்செய்து  கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
உபவாசம் தனித்தும் கூட்டாகவும் மனம்திரும்புவதற்கு உதவுகிறது:-
எஸ்றா:8: 21, 23
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் , நான் அங்கே அகாவா நதியண்டையில் உபவாசத்தைக்  கூறினேன். அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்தில் அதைத் தேடினோம், எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
உபவாசம் கர்த்தருடைய பாதுகாப்பைத் தேடுவதற்கு எங்களை ஞாபகப்படுத்துகிறது:-
எஸ்தர்: 4: 16  நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாடள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம், இவ்விதமாய் சட்டத்தைமீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன், நான் செத்தாலும் சாகிறேன் என்றுசொல்லச் சொன்னாள்.

உபவாசம்  எங்களை உற்சாகப்படுத்தும்:- 1.நாளா.10: 12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவன்குமாரரின் உடலையும் எடுத்து. யாபேசுக்கு கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாரிமரத்தின்கீழ் அடக்கம் பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
உபவாசம் எங்கள் துக்கங்களை மாற்றும்.
உபவாசம் பண்ணுவதற்குரியா  காலம் எது? 2.சாமு. 3:35…..மரணச்சடங்கின் நாளின் போது தாவீது எதையும் உண்ணுவதற்கு மறுத்துவிட்டான்.
கவலையுள்ள நாட்களில் உபவாசிப்பது நல்லது.
எஸ்றா: 10:6….. அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர்குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தான்.
உபாகமம்.9: 18-19. கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமூகத்தில் பொல்லாப்புச்செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தம், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்து கிடந்தேன், நான் அப்பம் புசிக்கவுமில்லை  தண்ணீர் குடிக்கவுமில்லை. கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்தேன், கர்த்தர் அந்தமுறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.
மற்றவர்களுடைய பாவங்களுக்காக வேண்டுதல்செய்யும்போது உபவாசித்தல் சிறப்பானது.
அப்.14: 23….அல்லாமலும் அந்தச்சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக் கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
பிரதிஷ்டையின் நாள்களில் உபவாசித்து ஜெபம்செய்தல் நல்லது
2.சாமு. 12:16. அப்பொழுது தாவீது அந்தப்பிள்ளைக்காக தேவனிடத்தில் பிராத்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.
பயப்படத் தக்க நோய் ஏற்படும் காலத்தில் உபவாசிப்பது நல்லது.
யோனா: 3:5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம்செய்யும்படி  கூறினார்கள்,பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள்.
மனம்திரும்பும் காலங்களில் உபவாசிப்பது ஏற்றது
உபவாசிப்பதற்கான வழிநடத்தல்கள் யாவை? எப்படி நான் உபவாசிக்க வேண்டும்?
ஏசாயா. 58: 3-7
நான் உபவாசம் பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள்  ஆத்துமாக்களை ஒடுக்கும் போது நீர் அதை அறியாமலிருக்கிநதென்ன என்கிறார்கள், இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து , உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள்.
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள், நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்கிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக் கொள்கிறதும், எனக்குப் பிரியமான நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுகிறாய்?

உபவாசம் என்பது ஒரு சமயச்சடங்கிற்கான செயற்பாடல்ல,ஆனால் கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி ஒடுக்குதலாகும். நாங்கள் என்னசெய்கிறோம் என்பதல்ல, ஏன் இதைச் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
மத். 6: 16-18.
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்கார்ரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள், அவர்கள்உபவாசிக்கிறதை மனுஷர்  காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்த்த்தென்று ,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோஉபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மணுஷருக்குக்  காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே  காணும்படியாக, உன் தலைக்கு  எண்ணெய்பூசி, உன் முகத்தைக கழுவு.
அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன்பிதா, உனக்கு வெளியரங்கமாய்ப் பதிலளிப்பார்.
ஜெபத்தைப்போல, உபவாசமும்பொது இடங்களில்செய்யப்படும் செயற்பாடல்ல, ஆனால் கர்த்தரோடு ஏற்படுத்தப்படும் அந்தரங்கச் செயற்பாடாகும்.
தானியேல்:-9: 3 நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து,தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்குநோக்கி
உபவாசமும் ஜெபமும் ஆவிக்குரிய  பாடல்களாகும்
அப் 13: 2-3 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது, பர்ணபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார், அப்பொழுது உபவாசித்துஜெபம்பண்ணி, அவர்கள்மேல்கைகளைவைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

0 comments: